[X] Close

கவலையெல்லாம் போக்கும் காமதேனு காயத்ரி ஸ்லோகம்!


gayathri-mandram

  • வி.ராம்ஜி
  • Posted: 08 Mar, 2018 09:26 am
  • அ+ அ-

காமதேனு காயத்ரி

ஓம் சுபகாயை வித்மஹே

காமதாத்ரியை சதீமஹி

தந்நோ தேனு:ப்ரசோதயாத்

பசு காயத்ரி :

ஓம் பசுபதயேச வித்மஹே

மகாதேவாய தீமஹி

தந்தோ பசுதேவி; ப்ரசோதயாத்

 

பசுவானவள், சிவபெருமானுக்குத் தாயாகவும் வசுக்களுக்குப் பெண்ணாகவும் ஆதித்யர்களுக்கு சகோதரியாகவும் நாபியில் அமிர்தத்தை வைத்திருப்பவளாகவும் திகழ்கிறாள்.

அப்பேர்ப்பட்ட காமதேனுவின் காயத்ரியைச் சொல்லுங்கள். பசுவில் மகாலக்ஷ்மியும் தேவதைகளும் வாசம் செய்கிறார்கள். ஆகவே பசுவை வணங்குவோம்; பசு காயத்ரி ஸ்லோகம் சொல்லி வழிபடுவோம். அகத்திக்கீரையோ உணவோ வழங்கி, ஆராதிப்போம்.

இழந்ததையெல்லாம் வழங்கவல்லது காமதேனு. இருப்பதையெல்லாம் தக்கவைக்க அருள்புரியும் காமதேனு என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். கடன் தொல்லையில் இருந்தும் மன உளைச்சலில் இருந்தும் விடுபடச் செய்யும் காமதேனுவை மனதாரப் போற்றுவோம்! வணங்குவோம். இனிதே வாழ்வோம்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close