காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் உண்டியலில் 176 கிராம் தங்கம், 295 வெள்ளி, 59 லட்சம் ரொக்கப் பணம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
சக்தி ஸ்தலங்களில் முதன்மை ஸ்தலமாக விளங்கும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாடு என பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.
இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலின் காணிக்கையாக கோயில் உண்டியலில் பணம் மற்றும் தங்கம், வெள்ளி, பொருட்களைக் காணிக்கையாக செலுத்தி விட்டு செல்வார்கள்.
பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்து விட்டு செல்லும் காணிக்கைகளை எண்ணும் பணி இன்று நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் பிரித்திகா, செயல் அலுவலர் சீனிவாசன், கோயில் ஸ்ரீ காரியம் சுந்தரேசன் ஆகியோர் முன்னிலையில் கோயில் பணியாளர்களும் தன்னார்வலர்களும் உண்டியல் காணிக்கை என்னும் பணியில் ஈடுபட்டனர்.
கோயில் உண்டியல் எண்ணப்பட்டதில் ரொக்கமாக 59 லட்சத்து 67 ஆயிரத்து 335 ரூபாயும்,176 கிராம் தங்கமும், 295 கிராம் வெள்ளியும் உண்டியல் வசூலாக கிடைத்துள்ளது. உண்டியல் வசூலில் கிடைத்த தங்கம் வெள்ளி மற்றும் ரொக்கப் பணத்தை வங்கியில் வைப்பு நிதியாக செலுத்தப்பட்டது.
இதையும் வாசிக்கலாமே...
உங்க அப்பன் வீட்டு வண்டியா? பெண்ணிடம் ஆவேசப்பட்ட அரசு பேருந்து ஓட்டுநர்... வைரலாகும் வீடியோ!
பகீர்...மெட்ரோ ரயில் முன் பாய்ந்த இளைஞர்: தந்தை இறந்த சோகத்தால் எடுத்த விபரீத முடிவு!
அதிர்ச்சி... 500 ரூபாய்க்காக தந்தையைக் கொலை செய்த மகன்!
இலவச பேருந்து பயணத்தால் வாழ்வாதாரம் போச்சு.. பிச்சை எடுத்து போராட்டம் நடத்திய ஆட்டோ ஓட்டுநர்கள்!
புகார் கொடுத்ததால் மிரட்டிய போலீஸ்... மகளுடன் தீக்குளிக்க முயன்ற தாய்!