‘வள்ளலார் - 200’ ஓராண்டு தொடர் அறநிகழ்வின் நிறைவு விழா சென்னை மற்றும் வடலூரில் இன்று நடைபெறுகிறது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் வள்ளலார் முப்பெரும் விழாவை கடந்த ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முப்பெரும் விழா இலச்சினை, தபால் உறை மற்றும் சிறப்பு மலர் ஆகியவற்றை வெளியிட்டு, 52 வாரங்களுக்கான விழாக்களில் முதல் வார நிகழ்ச்சிகளையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், ‘வள்ளலார் - 200’ ஓராண்டு தொடர் அறநிகழ்வின் நிறைவு விழா சென்னை மற்றும் வடலூரில் இன்று நடைபெறுகிறது. சென்னையில் நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
அதே போல், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார், பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞானபாலய தேசிகர், வேளாக்குறிச்சி ஆதீனம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட ஆதீனங்கள் கலந்து கொள்கின்றனர்.