திடீரென 18 கிராமங்களில் கடைகள் அடைப்பு... உண்ணாவிரதம்...மதுரையில் பரபரப்பு!


முத்தாலம்மன் கோயில் திருவிழா (பைல் படம்)

மதுரை அருகே முத்தாலம்மன் கோயில் திருவிழாவை நடத்த அனுமதிக்கக்கோரி 18 கிராம மக்கள் ஒன்றிணைந்து உண்ணாவிரதம் நடத்தினர்.

மதுரை மாவட்டம் எழுமலையில் உள்ள பிரசித்தி பெற்ற முத்தாலம்மன் கோயில் திருவிழா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். இத்திருவிழாவில் தேரோட்டம் நான்கு முக்கிய வீதிகளில் வழியாக நடைபெறும். இந்த ஆண்டு முத்தாலம்மன் கோயில் திருவிழா தேரோட்டத்தை நடத்த சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி அரசு அதிகாரிகள் அனுமதி தர மறுத்தனர்.

இதனையடுத்து இக்கோயிலை வழிபடும் எழுமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள 18 கிராம மக்கள் கோயில் திருவிழாவை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி எழுமலையில் உள்ள முத்தாலம்மன் கோயில் முன்பு இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

மேலும் எழுமலை மட்டுமின்றி 18 கிராமங்களிலும் உள்ள கடைகளை அடைத்து இப்பகுதி மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை முத்தாலம்மன் கோயில் நிர்வாக கமிட்டியினரும் அனைத்து உறவின்முறை தலைவர்களும் செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து உசிலம்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.

x