அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க, ராமாயணம் தொலைக்காட்சித் தொடரில் ராமர் - சீதையாக நடித்த அருண் கோவில் - தீபிகா சிக்லியா ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதர பொழுதுபோக்கு மற்றும் செயற்கைக்கோள் தொலைக்காட்சிகள் இல்லாத அக்காலத்தில், ராமாயணம் உள்ளிட்ட இதிகாசத் தொடர்களே மக்களை அதிகம் வசீகரித்திருந்தன. குறிப்பாக ராமாயணம் தொடரில் ஜோடியாக நடித்திருந்த அருண் கோவில் - தீபிகா ஜோடியை, ராமர் - சீதையாகவே தொழுதோர் உண்டு. பலரது வீடுகளில் ராமர் சீதை படங்களாக இந்த ஜோடியின் படங்களே வீற்றிருக்கும் அளவுக்கு இருவரும் பிரபலமானார்கள்.

80களில் பிரபலமான ராமாயணம் தொலைக்காட்சித் தொடர் வாயிலாக, இந்தியர்களின் குடும்ப உறுப்பினர்களாக அருண் - தீபிகா ஜோடி மாறியிருந்தார்கள். அதன் பிறகு இருவரும் இணைந்து திரையில் தோன்றாததும், இந்த ஜோடியின் ராமர் - சீதை அடையாளத்தை அழிக்க முடியாது செய்தது. 35 ஆண்டுகள் இடைவெளியில் கடந்த வருடம் ’நோட்டீஸ்’ என்ற திரைப்படம் மூலமாக இணைந்து தோன்றினார்கள். இத்தனை வருட இடைவெளியில் இந்த ஓடிடி காலத்திலும், ராமாயணம் தொடர் தொடர்ந்து ரசிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது அயோத்தி ராமர் கோயிலும், அதற்கான அழைப்பும் பெரும் அரசியலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ராமருக்கும் ராமர் கோயிலுக்கும் உரிமை கொண்டாடும் பாஜக, ராமர் கோயிலை அரசியலாக்கி வருவதாக குற்றம்சாட்டும் எதிர்க்கட்சியினர் பலரும், ராமர் கோயில் குடமுழுக்கு விழாவினை புறக்கணித்துள்ளனர். எனினும், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் இதர பிரபலங்கள் என ராமர் கோயிலுக்கு அழைக்கப்படுவோரால், ராமர் கோயில் விழா எதிர்பார்ப்புகளை எகிறச் செய்து வருகிறது.

இந்த வரிசையில் தற்போது பிரபல ராமாயணம் தொடரில் ராமர் - சீதையாக நடித்த அருண் கோவில் - தீபிகா சிக்லியாவுக்கும் அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. இதில் தீபிகா பெரும் மகிழ்ச்சி கொண்டிருக்கிறார். எனினும் ராமர் கோயிலில் சீதையின் சிலை இல்லாதது குறித்து தீபிகா தனது ஏமாற்றத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தி இருந்தார். இதர சினிமா நட்சத்திரங்களின் வரிசையில் வடக்கின் அமிதாப் பச்சன் முதல் தெற்கே ரஜினி காந்த் வரை பல சூப்பர் ஸ்டார்கள் ராமர் கோயில் விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
அதிரடி! தமிழகம் முழுவதும் 1847 காவலர்கள் இடமாற்றம்!
முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி: ஜன.9 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்!
17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்!
மம்தாவிடம் பிச்சை கேட்கவில்லை... காங்கிரஸ் கடும் கோபம்!
ஓடும் காருக்குள்ளேயே நடந்த கல்யாணம்! சினிமாவை விஞ்சிய காதல் ஜோடி