[X] Close

நாளை ஆடி அமாவாசை; பித்ரு ஆராதனை செய்ய மறக்காதீங்க!


aadi-amavaasai-tharppanam

  • வி.ராம்ஜி
  • Posted: 10 Aug, 2018 14:29 pm
  • அ+ அ-

அமாவாசை என்பது முன்னோருக்கான நாள். இறந்துபோன நம் பித்ருக்களுக்கு உரிய நன்னாள். இந்தநாளில், முன்னோரை வணங்குவதும் அவர்களுக்கு தர்ப்பணம் செய்வதும் மிகுந்த பலன்களைத் தந்தருளும். இந்தநாளில், முன்னோர் ஆராதனை செய்து வேண்டிக்கொண்டால், பித்ரு சாபத்தில் இருந்து விடுபடலாம்; பித்ருக்களின் ஆசியும் பூரணமாகக் கிடைக்கும் என்பது ஐதீகம்!

மாதந்தோறும் வருகிற அமாவாசையே இத்தனைப் பலன்களைத் தரக்கூடியது என்றால், வருடத்தின் மூன்று முக்கிய அமாவாசைகளை நினைத்துப் பாருங்கள். தை மாதத்தில் வருகிற அமாவாசை. புரட்டாசி மகாளய பட்ச காலத்தில் வருகிற அமாவாசை. அடுத்து ஆடி மாதத்தில் வருகிற அமாவாசை.

தை, புரட்டாசி, ஆடி மாத அமாவாசை ரொம்பவே விசேஷம். இந்தநாளில், முன்னோர்கள் எனப்படும் பித்ரு ஆராதனை மிக மிக அவசியம். அது நம் கடமை என்று வலியுறுத்துகிறது சாஸ்திரம்.

நாளைய தினம் 11.8.18 சனிக்கிழமை அன்று ஆடி அமாவாசை. மிக உன்னதமான நாளில், நாம் என்ன செய்கிறோம் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பார்களாம் முன்னோர்கள். அவர்களை நினைத்துச் செய்யப்படும் தர்ப்பணம், அப்போது விடப்படும் எள்ளு, அரிசி, தண்ணீர் ஆகியவையே அவர்களின் பசி போக்கும்; தாகம் தணிக்கும் என்கிறது சாஸ்திரம்.

காகம் சனீஸ்வரரின் வாகனம். அதேபோல், மூதாதையர் காகமாக வருவார்கள் என்றும் சொல்வார்கள். ஆகவே, ஆடி அமாவாசை நாளில், பித்ரு தர்ப்பணம் செய்ய்யுங்கள். இறந்தவர்களின் படங்களுக்கு பூக்களிடுங்கள். காகத்துக்கு அன்னமிடுங்கள். உங்கள் வீட்டின் கஷ்டங்களையெல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டார்கள் முன்னோர்கள். வீட்டின் கவலைகளையெல்லாம் போக்கி அருளுவார்கள் மூதாதையர்கள். நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் உங்கள் சந்ததியினரும் செம்மையாகவும் சிறப்பாகவும், வளமையாகவும் நலமுடனும் சகல பாக்கியங்களும் கிடைத்து வாழ அருளுவார்கள் என்பது உறுதி!

ஆடி அமாவாசை நாளில், பித்ரு ஆராதனை செய்ய மறக்காதீங்க!

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close