[X] Close
 

ஆடி அமாவாசை: மதுரை டூ ராமேஸ்வரம் ஸ்பெஷல் ரயில்!


aadi-amavaasai

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம்

  • வி.ராம்ஜி
  • Posted: 10 Aug, 2018 11:23 am
  • அ+ அ-

வடக்கே காசி என்றால் தெற்கே ராமேஸ்வரம் என்பார்கள். காசியும் ராமேஸ்வரமும் புண்ணிய க்ஷேத்திரங்கள் என்கிறது புராணம்.

தென்னகத்து காசி என்றே ராமேஸ்வரத்தைப் புகழுவார்கள். முன்னோர் ஆராதனை என்பது இங்கு ராமேஸ்வரத்தில் செய்வது விசேஷம்.

இங்கு வந்து செய்யப்படும் முன்னோர் ஆராதனையானது, பித்ருக்களின் பாவங்கள் போக்கக்கூடியது. பித்ருக்களின் ஆசீர்வாதம் தரக்கூடியது என்பது ஐதீகம்.

அமாவாசை என்றில்லாமல், எல்லா நாளும் இங்கு முன்னோர் வழிபாடு நடத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது. மாதந்தோறும் அமாவாசை அன்று ஏராளமான மக்கள் வந்து பித்ருக் கடன் தீர்த்துச் செல்வார்கள்.

முக்கியமாக, தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகிய நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவார்கள். பித்ருக்கடன் தீர்ப்பார்கள்.

நாளைய தினம் 11.8.18 சனிக்கிழமை அமாவாசை. ஆடி அமாவாசை. இந்தநாளில் திதி கொடுப்பதால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனால் அமாவாசை அன்று பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.

நாளை மறுநாள் (11-ந் தேதி) ஆடி அமாவாசை வருவதையொட்டி ராமேஸ்வரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். அவர்களின் வசதிக்காக மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 10.40 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் கீழ்மதுரை, சிலைமான், திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், உச்சிப்புளி, மண்டபம், பாம்பன் முதலான ரயில் நிலையங்களில நின்று செல்லும். இந்த ரயிலானது அதிகாலை 2 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்.

ராமேஸ்வரத்தில் இருந்து 11-ம்தேதி சனிக்கிழமை இரவு 11 மணிக்கு புறப்படும் ரயில் அதிகாலை 2.15 மணிக்கு மதுரை வந்தடையும்.

 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close