[X] Close

மாலையில் வாசலில் விளக்கேற்றுங்கள்! ஆடி கடைசி வெள்ளி: அம்மன் தரிசனம்!


aadi-velli

  • வி.ராம்ஜி
  • Posted: 10 Aug, 2018 10:48 am
  • அ+ அ-

ஆடி மாதம் அற்புதமான மாதம். உன்னதமான மாதம். சக்தி நிறைந்த மாதம். சங்கடங்கள் நீக்கும் மாதம். வளமும் நலமும் கொழிக்கச் செய்யும் மாதம். ஏனென்றால், இது அம்மனின் மாதம். அம்மனுக்கு உகந்த மாதம்.

ஆடி மாதம் வந்துவிட்டாலே, அம்மன் கோயில்களில் கூட்டம் களைகட்டத் தொடங்கிவிடும். விழாக்கள் வரிசைகட்டி வந்துவிடும். நேர்த்திக்கடன்களைச் செலுத்துவார்கள் பக்தர்கள். அம்மனுக்குக் கூழ் வார்த்து எல்லோருக்கும் வழங்குவார்கள்.

ஆடிச் செவ்வாயும் ஆடி வெள்ளியும் கோலாகலமாகக் கொண்டாடப்படும்.

ஆடிவெள்ளிக்கிழமையின் போது அம்மனுக்கு புடவை சார்த்துவோர் பலரும் உண்டு. காஞ்சிபுரம் காமாட்சிக்கு தினமும் ஏகப்பட்ட புடவைகள் குவிந்த வண்ணம் இருக்கும். அத்தனைப் புடவையையும் கட்டுவதற்குத்தான் நேரமிருக்காது அவளுக்கு!

ஆடி வெள்ளிக்கிழமையின் போது, வீட்டில் சர்க்கரைப் பொங்கல், பால் பாயசம், கேசரி, கல்கண்டு சாதம் என ஏதேனும் ஒன்று நைவேத்தியம் செய்து அம்மனை வழிபடுவது சிறப்பு.

ஆடி மாதத்தின் கடைசி வெள்ளி இன்று (10.8.18). எனவே இந்தநாளில், மாலையில் அம்மன் கோயிலுக்குச் செல்லுங்கள். உங்கள் குறைகளையெல்லாம் அவளிடம் சொல்லி முறையிடுங்கள். முக்கியமாக, மாலை வேளையில், வீட்டுப் பூஜையறையிலும் வாசலிலும் விளக்கேற்றி வையுங்கள். விளக்கொளியைப் பார்த்ததும் பூரித்துப் போகும் அம்பிகை, சகல ஐஸ்வர்யங்களையும் வழங்க, நம் வீட்டுக்கு ஓடோடி வருவாள் என்பது ஐதீகம்!

ஆகவே இன்று ஆடி வெள்ளியின் நிறைவு நாளில், மாலையில் வீட்டு வாசலில் விளக்கேற்றுங்கள். அம்மனை மனதார பூஜித்துக்கொள்ளுங்கள். வீட்டின் தரித்திரம் விலகும். ஐஸ்வர்யம் குடிகொள்ளும் என்பது உறுதி!

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close