[X] Close
 

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 10 Aug, 2018 10:15 am
  • அ+ அ-

மேஷம்: புதுவாகனம், நவீன ரக செல்போன் வாங்கி மகிழ்வீர்கள். உங்களின் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டு உறவினர்கள் சிலர் பொறாமைப்படுவார்கள். திடீர்ப் பயணம் உண்டு.

ரிஷபம் : எதையும் சமாளிக்கும் தைரியம் பிறக்கும். மனோபலம் அதிகரிக்கும். நீண்டநாள் பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் சுமுகத் தீர்வு காண்பீர்கள்.

மிதுனம் : சந்தர்ப்பச் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு சமயோசிதமாகப் பேசும் சாமர்த்தியம் வரும். பணவரவு உண்டு. வீட்டைப் புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும்.

கடகம் : தர்மசங்கடமான சூழ்நிலையைச் சமாளிக்க வேண்டியது வரும். நண்பர்களால் பிரச்சினைகள் வந்துபோகும். யாருக்கும் பணம் வாங்கித் தரவோ உத்தரவாதம் தரவோ வேண்டாம்.

சிம்மம் : திடீர் செலவுகள் ஏற்படும். வாகனம், வீடு பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். நவீன ரக தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள்.

கன்னி : தைரியம் பிறக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. அலைச்சல் குறையும். பழைய வாகனத்தை மாற்றி புது வாகனம் வாங்குவீர்கள். மனைவி வழி உறவினரால் அனுகூலம் உண்டு.

துலாம் : பேச்சில் கம்பீரம் தெரியும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். பிரபலமானவர்களுடன் சாதுர்யமாகப் பேசி காரியங்களை முடிப்பீர்கள். கடன் பிரச்சினை தீரும்.

விருச்சிகம் : எதிலும் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை பிறக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக்கடனைச் செலுத்துவீர்கள்.

தனுசு : பழைய கடனைப் பற்றிய கவலைகள், வீண் பயம் வரக்கூடும். குடிதண்ணீர், உணவு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம்.

மகரம் : உங்கள் ரசனைக்கேற்ற வீடு, வாகனம் வாங்குவீர்கள். உறவினர்கள் உங்களைக் கலந்து ஆலோசித்து முடிவுகள் எடுப்பார்கள். நவீன ரக மின்சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

கும்பம் : எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

மீனம் : புதிய திட்டங்கள் நிறைவேறும். பூர்வீகச் சொத்தை மாற்றி அமைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பிள்ளைகள் ஆக்கபூர்வமாகச் செயல்படுவார்கள். விருந்தினர் வருகை உண்டு.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close