[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 09 Aug, 2018 09:20 am
  • அ+ அ-

மேஷம்: பழைய சம்பவங்களை அடிக்கடி நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்ப்பீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள்.

ரிஷபம்: ஆரவாரமின்றி சில வேலைகளைச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும். பயணங்களால் ஆதாயம் உண்டு. விருந்தினர் வருகையுண்டு.

மிதுனம்: சில நேரங்களில் மனம் அமைதியற்று காணப்படும். கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து செல்லும். யாரையும் நம்பி உறுதிமொழி தர வேண்டாம். 

கடகம்: திட்டமிட்டக் காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டியது வரும். பிள்ளைகள் சில விஷயங்களில் பிடிவாதமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம்.

சிம்மம்: நம்பிக்கைக்குரியவர்களின் ஆதரவு கிட்டும். .தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும்.

கன்னி: அதிரடியாகச் செயல்பட்டு சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பணவரவு உண்டு. பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

துலாம்: இழுபறியாக இருந்த காரியங்களெல்லாம் முடிவுக்கு வரும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

விருச்சிகம்: புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் குறை கூறிக்கொண்டிருக்காதீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவைப் பயன்படுத்துங்கள்.

தனுசு: மனஉளைச்சல் நீங்கும். வீட்டில் கலகலப்பான சூழல் அமையும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வாகனப்பழுது நீங்கும். கலைபொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

மகரம்: ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். தாயின் உடல்நிலை சீராகும். முக்கியப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும்.

கும்பம்: சோர்வு, அலைச்சல் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கையில் காசுபணம் தேவையான அளவு இருக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

மீனம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாகச் சாதிப்பீர்கள். குடும்பத்தினருடன் இருந்துவந்த கசப்புணர்வு நீங்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

 

 

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close