[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • வி.ராம்ஜி
  • Posted: 05 Aug, 2018 09:27 am
  • அ+ அ-

மேஷம்: யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். அக்கம்பத்தினருடன் அளவாகப் பழகுங்கள். எதிலும் யோசித்து முடிவெடுங்கள். மாலை முதல் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

ரிஷபம்: எதிர்பார்த்த காரியங்கள் தாமதமாக முடியும். திடீர் பயணங்களும், செலவுகளும் வந்து போகும். பிள்ளைகளின் அறிவுப்பூர்வமான நடவடிக்கையைக் கண்டு மகிழ்வீர்கள்.

மிதுனம்: நினைத்தது நிறைவேறும். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

கடகம்: எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. கவுரவப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். திடீர் பயணம் ஏற்படும்.

சிம்மம்: பிரபலங்கள், அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.

கன்னி: கணவன் - மனைவிக்குள் சின்னச் சின்ன உரசல் போக்கு வரும். யாரையும் குறை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். விட்டுக்கொடுத்துச் செல்வது பிரச்சினைகளைத் தவிர்க்கும்.. 

துலாம்: ஆடை, ஆபரணங்கள் சேரும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.. விசேஷங்களால் வீடு களைகட்டும். மாலை முதல் நிதானித்துச் செயல்படப் பாருங்கள்.

விருச்சிகம்: பிரச்சினைகள், சிக்கல்களுக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். பிரபலங்கள் உதவுவார்கள். உங்களின் புதிய முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். 

தனுசு: இழுபறியாக இருந்த பல வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். விருந்தினர் வருகை உண்டு.

மகரம்: பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். வழக்குகள் சாதகமாகும். பால்ய நண்பரைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

கும்பம்: உங்கள் செயலில் வேகம் கூடும். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். மகனுடைய வேலை சம்பந்தமாக முக்கிய பிரமுகரைச் சந்திப்பீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும்.

மீனம்: பேச்சில் முதிர்ச்சி தெரியும். சொத்துத் தகராறு முடிவுக்கு வரும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பணப்பற்றாக்குறை நீங்கும். உடல்நலத்தில் கவனம் தேவை.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close