[X] Close

இன்று... பிள்ளையாரைப் பாருங்க! உங்க சங்கடமெல்லாம் தீர்ப்பார்!


pillayarai-paarunga

  • வி.ராம்ஜி
  • Posted: 31 Jul, 2018 10:53 am
  • அ+ அ-

சங்கடஹர சதுர்த்தி இன்று (31.7.18). இந்தநாளில் பிள்ளையாரைப் பாருங்கள். உங்கள் பிரச்சினைகளையும் சங்கடங்களையும் தீர்த்தருள்வார்.

பிள்ளையாருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபடுங்கள். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றியைத் தந்தருள்வார்.

மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி நாள் வரும். இது விநாயகர் வழிபாட்டுக்குரிய அற்புதமான நாள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். மாதந்தோறும் வருகிற சிவராத்திரி, சிவ வழிபாட்டுக்கு உரியது என்பது போல், சஷ்டியானது முருக வழிபாட்டுக்கு உகந்தது என்று கொண்டாடுவது போல், ஏகாதசி நாளில் மகாவிஷ்ணுவை வழிபடுவது போல், சங்கட ஹர சதுர்த்தி நாளில், விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவார்கள் பக்தர்கள்.

இந்தநாளில், விநாயகர் அகவல் படித்தும் பூஜைகள் மேற்கொள்ளலாம். இது எண்ணற்ற பலன்களைத் தரவல்லது.

மாலையில், அருகில் உள்ள பிள்ளையார் கோயிலுக்குச் சென்று, ஆனைமுகனைத் தரிசிப்பது நன்மைகளையெல்லாம் வழங்கும். நலம் அனைத்தும் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

இன்றைய சங்கடஹர சதுர்த்தி நன்னாளில், ஆடிச்செவ்வாய் எனும் அற்புதநாளில்,  விநாயகருக்கு கொழுக்கட்டையோ, சர்க்கரைப் பொங்கலோ, சுண்டலோ எலுமிச்சை சாதமோ... நைவேத்தியம் செய்து வேண்டிக் கொள்ளுங்கள்.

உங்கள் காரியத்தை வீரியமாக்கித் தருவார். வெற்றியைத் தந்தருள்வார் பிள்ளையார்!

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close