[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 16 Jul, 2018 09:14 am
  • அ+ அ-

 

மேஷம் : நம்பிக்கையுடன் செயல்பட்டு சாதனை படைப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வீண் செலவுகளைக் கட்டுப்படுத்தி, சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.

ரிஷபம் : எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். முக்கிய பிரமுகர்களைச் சந்திப்பதால் ஆதாயம் உண்டாகும். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பணவரவு திருப்தி தரும்.

மிதுனம் : தன்னிச்சையாக செயல்பட்டு சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், மரியாதை, கெளரவம் உயரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.

கடகம்  : குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். உற்சாகம் அதிகரிக்கும். உறவினர்கள் மதிப்பார்கள். பழுதான மின்னணு சாதனங்களை மாற்றுவீர்கள். பேச்சில் நிதானம் தேவை.

சிம்மம் : அதிக வேலைச்சுமையால் ஒருவித பதற்றம், டென்ஷனுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தினரின் உணர்வுகளைப் புரிந்துகொள்வீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும்.

கன்னி : எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. உடன்பிறந்தவர்களுடன் மனத்தாங்கல் வந்து நீங்கும். தடைகள், தடங்கல்களைத் தாண்டி முன்னேறுவீர்கள். ஆன்மிக நாட்டம் உயரும்.

துலாம் : குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள். நண்பர்கள், உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள்.

விருச்சிகம் : முயற்சி பலிதமாகும். பொதுக் காரியங்களில் ஈடுபட்டு பாராட்டு பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல சேதி வரும்.

தனுசு : வாழ்க்கையில் புதிய அத்தியாயம் தொடங்குவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும்.விஐபிக்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்.

மகரம் : புதிய நபர்களிடம் இங்கிதமாகப் பேசுவீர்கள். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப்பிடியுங்கள். பணம், நகையை கவனமாகக் கையாள்வது அவசியம்.

கும்பம் : தன்னம்பிக்கை துளிர்விடும். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள்.

மீனம் : குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று நடப்பார்கள். வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். தம்பதிக்குள் சந்தோஷம் நிலைக்கும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close