[X] Close

5.7.18 இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 05 Jul, 2018 09:36 am
  • அ+ அ-

 

மேஷம் : உறைனர்கள், நண்பர்களின் அன்புத்தொல்லை அதிகரிக்கும். பிள்ளைகளின் திருமணம், உத்தியோகம் குறித்த கவலைகளும் வந்து நீங்கும். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

ரிஷபம் : சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பங்கு வர்த்தகம் மூலம் பணம் வரும். வாகனத்தைச் சீர் செய்வீர்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். திடீர் பயணம் ஏற்படக்கூடும்.

மிதுனம் : பூர்வீகச் சொத்தை பராமரிப்பீர்கள். சிக்கனமாகச் செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். தாழ்வு மனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கை உண்டாகும். விருந்தினர் வருகை உண்டு.

கடகம் : பணப்பற்றாக்குறை நீங்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தந்தையின் உடல்நிலை சீராகும். நண்பரிடம் கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் திருப்பித் தருவீர்கள்.

சிம்மம் : செலவுகள் கூடிக்கொண்டே போவதால் சேமிப்பு கரையும். பிரபலமானவர்களுடன் சிறுசிறு கருத்துமோதல்கள் ஏற்படும். இடம், பொருள், ஏவல் அறிந்து பேசுவது நல்லது.

கன்னி: முக்கியப் பிரச்சினைக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். யதார்த்தமாகப் பேசி காரியங்கள் முடிப்பீர்கள். ஆடை ஆபரணங்கள் கலைப்பொருட்கள், வாங்குவீர்கள்.

துலாம் : குடும்பத்தில் குழப்பம் நீங்கி அமைதி திரும்பும். கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். பிள்ளைகளின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் மாறும்.

விருச்சிகம் : நினைத்த காரியங்கள் எவ்விதத் தடையுமின்றி நிறைவேறும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். பிரபலமானவர்கள் உங்களுக்கு ஆதரவாகப் பேசுவார்கள்.

தனுசு : பழுதான வாகனத்தைச் சரி செய்வீர்கள். நல்ல காற்றோட்டம், தண்ணீர் வசதி உள்ள வீட்டுக்கு சிலர் மாறுவீர்கள். அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

மகரம் : பிரச்சினைகளைப் பக்குவமாக அணுகி வெற்றி பெறும் வித்தையைக் கற்றுக்கொள்வீர்கள். மற்றவர்களைச் சார்ந்திருக்காமல் தன்னிச்சையாகச் செயல்படும் தைரியம் பிறக்கும்.

கும்பம் : கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சினை சுமூகமாக முடியும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு விலகி அன்யோன்யம் பிறக்கும்.

மீனம் : தாய்வழிச் சொத்துக்களைப் பெறுவதில் சிக்கல்கள் இருக்கும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் கவனமாகச் செயல்படுங்கள். அரசு காரியங்கள் தடைப்பட்டு முடியும்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close