[X] Close

வார ராசி பலன்கள் ஜூலை 11 முதல் 17 வரை (மேஷம் முதல் கன்னி வரை)


11-17

  • kamadenu
  • Posted: 11 Jul, 2019 12:04 pm
  • அ+ அ-

-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் தைரிய ஸ்தானத்தில் இருக்கும் கிரகச் சேர்க்கையால் எதிர்பார்த்த பணவரவு தாமதப்படலாம். எந்தக் காரியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும். தொழில், வியாபாரத்தில் கடன் பிரச்சினைகள் தீரும். உத்தியோகத்தில் சில விஷயங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு சங்கடப்பட நேரலாம்.

குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். பிரிந்த குடும்ப உறுப்பினர் மீண்டும் வந்து சேர்வார்கள். கணவன் மனைவிக்குள் மனஸ்தாபங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர் மத்தியில் மரியாதை கூடும்.

அரசியல்வாதிகளுக்கு, புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு, முக்கிய நிகழ்வுகளில் பங்குபெறக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு, எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும். முக்கியப் பொறுப்புகள் கிடைக்கக்கூடும். மாணவர்களுக்கு, கல்வியில் திருப்தியான நிலை காணப்படும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

திசைகள்: கிழக்கு, வடகிழக்கு

நிறங்கள்: இளஞ்சிவப்பு , மஞ்சள்

எண்கள்: 6, 7, 9

பரிகாரம்: சுவாமிமலை முருகனை வணங்கி வர காரிய வெற்றி உண்டாகும். கவலை தீரும்.

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதனின் சஞ்சாரத்தால் செலவு அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் சுமாராக நடக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். நீங்கள் வியாபாரம் செய்யும் பணியாற்றும் இடத்துக்கு மகான்கள் வருகை தருவார்கள். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவும் உண்டாகும். பிள்ளைகளின் படிப்புக்காக வங்கிக் கடனுக்கு அலைவீர்கள்.

கணவன் மனைவிக்குள் இடைவெளி குறையும். தாய்வழி உறவினர்களின் உதவி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு, முக்கிய நபர்களைச் சந்திப்பீர்கள். கலைத் துறையினர் எதிர்பார்த்த பணவரவுகளைப் பெறலாம். பெண்களுக்கு, எந்தக் காரியத்திலும் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். பணவரத்து தாமதப்படும். மாணவர்களுக்கு, கல்வியில் இருக்கும் மந்தநிலை மாறக் கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம். கல்விச் சுற்றுலா சென்று வருவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, நீலம்

எண்கள்: 1, 6

பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் இருக்கும் கிரகங்களின் கூட்டணியால் மனம் மகிழும் சம்பவங்கள் உண்டாகும். நிம்மதி, மனோதிடம் உண்டாகும். தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உற்சாகமாகக் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் முழுக் கவனத்துடன் ஈடுபட வேண்டும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும்.

புதிய வீடு கட்டுவது, பழைய வீட்டைப் புதுப்பிப்பது போன்ற பணிகளைத் தொடங்குவீர்கள். கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை சேரும். தேவையானவற்றை வாங்கிக் கொடுத்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, பதவிகள் தேடி வரும். கலைத் துறையினருக்கு, தொட்டதெல்லாம் துலங்கும் நாட்கள் இவை. பெண்களுக்கு, விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். மாணவர்கள் சாதூரியத்துடன் நடந்துகொண்டு பாராட்டைப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன்

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: சிவப்பு, பச்சை

எண்கள்: 1, 5

பரிகாரம்: மதுராந்தகம் ஏரிகாத்த ராமரை வணங்க, குடும்பத்தில் குழப்பம் நீங்கும்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் பஞ்சம ஸ்தானத்தில் இருக்கும் குருவால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடக்கலாம். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர் பாலினத்தவரால் லாபம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்ற வாய்ப்புகள் பெருகும்.

வியாபாரம் தொடர்பான செலவு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் கிடைக்கலாம். குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். உங்களது கருத்துகளுக்கு மறுபேச்சே இருக்காது. கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

அரசியல்வாதிகளுக்கு, அனைத்துக் காரியங்களையும் சுலபமாக நடத்தி முடித்துவிடுவீர்கள். கலைத் துறையினருக்கு, ஏற்றமடையத் தேவையான முயற்சிகள் கைகூடி வரும். வெளிநாட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம். பெண்களுக்கு, தொலைதூரத் தகவல்கள் மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கும். மாணவர்களுக்கு, கல்வி தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன்

திசைகள்: வடக்கு, வடகிழக்கு

நிறங்கள்: வெள்ளை

எண்கள்: 2, 3, 6

பரிகாரம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியை வணங்க துன்பங்கள் தீரும். மனக்கவலை அகலும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியாதிபதி, லாபாதிபதியுடன் இணைந்து சஞ்சரிப்ப தால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். விருந்து, கேளிக்கைகளில் கலந்துகொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் தொய்வு நிலை மாறி முன்னேற்றம் உண்டாகும். லாபம் அதிகரிக்கும். திறமையான பணியாளர்கள் அமைவார்கள்.

உத்தியோகத்தில் திறமையாகச் செயல்பட்டு சாதகமான பலன் காண்பீர்கள். குடும்பத்தினருடன் கவனமாகப் பேச வேண்டும். கணவன், மனைவிக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும் அரசியல்வாதிகளுக்கு, பாராட்டுகள் கிடைக்கும்.

கலைத் துறையினர் ஏற்றத்தைப் பெறலாம். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பெண்களுக்கு, பணவரவு திருப்தி தரும். வெளியூர்ப் பயணம் செல்ல நேரலாம். தோழிகளுடன் சுமுகமாகப் பேசிப் பழகுவது நல்லது. மாணவர்களுக்கு, கல்வியில் வேகம் காணப்படும். சக மாணவர்களிடம் அனுசரித்துச் செல்ல வேண்டும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், சனி

திசைகள்: கிழக்கு, வடக்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்

எண்கள்: 1, 3, 5

பரிகாரம்: சிவனை வில்வ அர்ச்சனை செய்து வணங்க எதிர்ப்புகள் விலகும். மனக்குழப்பம், கடன்சுமை நீங்கும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் சுகஸ்தானத்தில் இருக்கும் பஞ்சமாதிபதி சஞ்சாரத்தால் தடைகள் நீங்கும். எதிர்ப்புகள் விலகும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் மேம்படும். பணவரவு எதிர்பார்த்தது போல் இருக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கலாம். உடல் சோர்வும் மன அழுத்தமும் நிலவும். சரக்குகளை அனுப்பும்போது கவனம் தேவை.

குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான சூழ்நிலை உண்டாகும். கணவன் மனைவிக்குள் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காண்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு, முக்கியமான பதவிகளைப் பெற முயல்வீர்கள்.

கலைத் துறையினருக்கு, மூத்த கலைஞர்களின் ஆதரவு இருக்கும். பெண்களுக்கு, எதிலும் யோசித்துச் செயல்பட வேண்டும். வீண் அலைச்சல் ஏற்படலாம். மாணவர்களுக்கு, விளையாட்டில் ஆர்வம் உண்டாகும். பாடங்களைக் கவனமாகப் படிப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன், சனி

திசைகள்: வடக்கு, வடகிழக்கு

நிறங்கள்: பச்சை

எண்கள்: 1, 5

பரிகாரம்: ஆதிகேசவப் பெருமாளை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். குறைகள் நீங்கும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close