[X] Close

30.6.18 இந்தநாள் உங்களுக்கு எப்படி?


30-6-18-indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 30 Jun, 2018 08:59 am
  • அ+ அ-

மேஷம் : பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி யோசிப்பீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை விலகும். புண்ணியத் தலங்களுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

ரிஷபம் : குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும்.

மிதுனம் : உடல்நலம் பாதிக்கக் கூடும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். 

கடகம் : குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு.

சிம்மம் : பிள்ளைகளின் பொறுப்புணர்வைப் பாராட்டுவீர்கள்.. சகோதரர் பாசமழை பொழிவார். இங்கிதமாகப் பேசி காரியங்களைச் சாதிப்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

கன்னி :  பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். உறவினர்கள் பாராட்டுவார்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். நண்பர்களால் ஆதாயமடைவீர்கள்.

துலாம் : புது முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

விருச்சிகம் : கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. தாயின் உடல்நலம் சீராகும். வீடு, வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

தனுசு : விடாப்பிடியாக செயல்பட்டு காரியத்தை நிறைவேற்றுவீர்கள். கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். சகோதரர் வகையில் நன்மை உண்டு. கடனை பைசல் செய்வீர்கள்.

மகரம் : மனக்குழப்பம் அதிகரிக்கும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். உங்கள் மீது சிலர் வீண்பழி சுமத்துவார்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து விலகும்

கும்பம் :  பேச்சில் கம்பீரம் பிறக்கும். முன்கோபம், வீண் அலைச்சல் விலகி நிம்மதி கிட்டும். குடும்பத்தில் அமைதி நிலவும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு.

மீனம் : குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். பிரார்த்தனைகள் நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close