[X] Close

29.6.18 இந்தநாள் உங்களுக்கு எப்படி?


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 29 Jun, 2018 08:52 am
  • அ+ அ-

மேஷம் : எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. பூர்வீகச் சொத்தை சீர்படுத்துவீர்கள். பழைய பிரச்சினைகள், சிக்கல்களுக்கு சுமூகத் தீர்வு கிடைக்கும்.

ரிஷபம் : செலவுகள் அதிகரித்துக் கொண்டே போகும். பிரபலமானவர்களுடன் சின்னச் சின்ன கருத்து மோதல்கள் ஏற்படும். இடம், பொருள், ஏவலறிந்து பேசுவது நல்லது.

மிதுனம் : உங்களின் புகழ், கவுரவம் ஒருபடி உயரும். பிள்ளைகளின் பிடிவாத குணம் மாறும். அவர்கள் உங்களுடைய அறிவுரைகளை ஏற்றுக் கொள்வார்கள். திடீர் பயணம் உண்டு.

கடகம்  : கணவன் - மனைவிக்குள் இருந்த கசப்புணர்வுகள் நீங்கும். பிள்ளைகளின் பொறுப்பற்ற செயல்பாடுகள் மாறும். இழுபறியாக இருந்த வழக்கில் சாதகமாக தீர்ப்பு வரும்

சிம்மம் :  உங்களுடைய புதிய திட்டங்கள் நிறைவேறும். நீண்டநாட்களாகப் பார்க்க வேண்டுமென்று நினைத்திருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

கன்னி : மனதில் நிலவிய அச்ச உணர்வு நீங்கும். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்ற தைரியம் பிறக்கும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும்.

துலாம் :  பிரச்சினைகளை சாதுர்யமாக அணுகி வெற்றி பெறும் வித்தையைக் கற்றுக் கொள்வீர்கள். மற்றவர்களைச் சார்ந்திருக்காமல் தன்னிச்சையாக செயல்படும் தைரியம் பிறக்கும்.

விருச்சிகம் : பேச்சிலே முதிர்ச்சி தெரியும். விலகிச் சென்ற நண்பர்கள், உறவினர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். பங்கு வர்த்தகம் மூலமாகவும் பணம் வரும். விருந்தினர் வருகை உண்டு.

தனுசு  : ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். முன்கோபத்தைத் தவிர்க்கப் பாருங்கள். சின்னச் சின்ன பிரச்சினைகளையெல்லாம் பெரிதாக்கிக் கொண்டிருக்க வேண்டாம்.

மகரம் : குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். புண்ணிய தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வெளிநாட்டினரால் ஆதாயம் உண்டாகும்.

கும்பம் : வேற்றுமொழி, மதத்தைச் சேர்ந்தவர்களால் ஆதாயமடைவீர்கள். உங்களின் கோபம் குறையும். சிலருக்கு பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும்.

மீனம் : பழைய நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வீடு கட்டுவதற்கு, வாங்குவதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும். உயர்கல்வியின் பொருட்டு அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.

 

 


 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close