[X] Close

வார ராசி பலன்கள் ஜூலை 04 முதல் 10 வரை (மேஷம்  முதல் கன்னி வரை)


04-10

  • kamadenu
  • Posted: 04 Jul, 2019 12:28 pm
  • அ+ அ-

-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாயின் சுகஸ்தான சஞ்சாரத்தால் பல வகையிலும் நற்பலன்கள் தேடி வரும். தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்களால் மகிழ்ச்சி உண்டு. தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் ஸ்தானத்தை ராசிநாதன் பார்க்கிறார். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல்கள் தீரும். பணவரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். வேலையில் நல்ல மாற்றம் உண்டாகலாம். பயணச் செலவு உண்டாகும்.

கணவன் மனைவிக்குள் பரஸ்பரம் மனம் விட்டுப் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பெண்களுக்கு, தன்னம்பிக்கை அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு வீண் அலைச்சல், காரிய தாமதம் ஏற்படலாம். அரசியல்வாதிகளுக்கு, கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சினை தீரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். மாணவர்களுக்கு, கல்விக்காகச் செலவு உண்டாகும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: ஆரஞ்சு, நீலம்

எண்கள்: 5, 7, 9

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து முருகனை வணங்கி வர காரியத் தடைகள் நீங்கும்.

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் தனவாக்கு, குடும்ப ஸ்தானத்தில் பலமாக சஞ்சரிக்கிறார். காரியத் தடைகள் நீங்கும். தொழில், வியாபாரச் சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்குப் புதிய பதவி, பொறுப்புகள் கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.

கணவன், மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பெண்களுக்கு, திறமையான பேச்சினால் சாதகமான பலன் கிடைக்கும். கலைத் துறையினருக்கு அனைத்தும் லாபகரமாக நடக்கும். வாக்கு வன்மையால் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, எச்சரிக்கையாகச் செயல்பட்டால் காரிய வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு, முழு முயற்சியுடன் படிப்பீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, வெளிர்நீலம்

எண்கள்: 2, 6

பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று நவக்கிரகத்தில் சுக்கிரனுக்கு, தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த பணவரவு இருக்கும்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் இருக்கும் கிரகங்களின் கூட்டணியால் துணிச்சலான சில முடிவுகளை எடுப்பீர்கள். நன்மைகளைத் தரும் காலகட்டமாக அமையும். மனை, வீடு வாங்க எடுக்கும் முயற்சிகள் சற்றுத் தாமதமாக நடக்கும். எதிலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நன்மை தரும். குருவின் பார்வை தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால் தொழிலில் குழப்பம் நீங்கித் தைரியம் உண்டாகும்.

உத்தியோகத்தில் மிகவும் கவனமாகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தாய், தாய் வழி உறவினர்கள் தொடர்பா கமனக்கவலை ஏற்படும். காதல் விவகாரங்களில் தகராறு உண்டாகும். பெண்களுக்கு, மனக்குறைகள் நீங்கி தன்னம்பிக்கை உண்டாகும். கலைத் துறையினருக்கு, துணிச்சல் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றைச் சந்திக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு, கூடுதல் நேரம் பாடங்களைப் படிக்க வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன்

திசைகள்: மேற்கு, வடகிழக்கு

நிறங்கள்: பச்சை, மஞ்சள்

எண்கள்: 3, 5

பரிகாரம்: பெருமாளைப் புதன்கிழமை அன்று தரிசித்து அர்ச்சனை செய்ய எல்லா நலனும் உண்டாகும்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் இருக்கும் செவ்வாயால் எதிர்ப்புகள் விலகும். பணவரவு அதிகரிக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். வியாபார நிமித்தமாகப் பயணங்கள் நிகழும். உத்தியோகத்தில் திறமையான பேச்சால் வெற்றி பெறுவார்கள். சக ஊழியர்கள் கை கொடுப்பார்கள்.

குடும்பாதிபதி சூரியனின் பாதசார சஞ்சாரத்தால் குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சி நீடிக்கும்; உறவு பலப்படும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கப் பெறுவீர்கள். அவர்களது கல்வியில் முன்னேற்றம் காணப்படும். பெண்களுக்கு, புத்தி சாதுரியம் அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு, கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். அரசியல்வாதிகள் கோபமாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். மாணவர்களுக்கு, கல்வியில் நாட்டம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன்

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, வெளிர்பச்சை

எண்கள்: 2, 5

பரிகாரம்: அபிராமி அந்தாதி பாடல்களைப் பாடி அம்மனை வணங்கி வர குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் சுபச்செலவு ஏற்படும். ரண ருண ரோக ஸ்தானம் செவ்வாய் பார்வையைப் பெறுவதால் உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம். லாபம் எதிர்பார்த்ததைவிட அதிகரிக்கும். மேலிடத்திலிருந்து கனிவான செய்திகள் தேடி வரும். வேலை மாறுதலுக்கு முயன்றவர்களுக்கு நல்ல செய்தி வரும். குடும்பத்தில் கலகலப்பு அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் சொல்வதை நிதானமாகக் கேட்க வேண்டும்.

பெண்களுக்கு, எதிலும் சுணக்க நிலை நீங்கும். தாய்வழியில் உதவி உண்டு. கலைத் துறையினருக்கு, வீண் அலைச்சலைச் சந்திக்க வேண்டி இருக்கும். அரசியல்வாதிகளுக்கு, எதிலும் நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பார்க்கும் பதவியைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு, கல்வியைப் பற்றிய கவலை நீங்கும். தடையைத் தாண்டி முன்னேற முயல்வீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

எண்கள்: 1, 3, 6

பரிகாரம்: சிவன் ஆலயத்திற்கு சென்று வணங்கி அர்ச்சனை செய்ய காரிய வெற்றி உண்டாகும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் வீண் வாக்குவாதங்கள் அகலும். எந்தக் காரியத்திலும் சிறிது முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். புதிய பொறுப்புகள் வரும். பணி நீட்டிப்பு, பதவி உயர்வு கிடைப்பதற்கான சூழல் அதிகரிக்கும். குடும்பத்தில் தொலைந்த சந்தோஷம் மீளும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

தந்தைவழியில் சொத்துப் பிரச்சினைகள் தீரும். பெண்களுக்கு, வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் வருகையால் கலகலப்புக்குக் குறைவிருக்காது. கலைத் துறையினருக்கு, புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகளுக்கு, மனதில் இருக்கும் குறைகள் அகலும். மாணவர்களுக்கு, கல்வியில் வெற்றி பெறுவதற்குக் கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு

நிறங்கள்: பச்சை, மஞ்சள்

எண்கள்: 2, 3, 5

பரிகாரம்: துளசி அர்ப்பணித்து ஐயப்பனை அர்ச்சனை செய்து வணங்கி வர உடல் ஆரோக்கியம் பெறும்.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அருள் பாலிக்கும் 'அத்தி வரதர்' வைபவம் 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close