[X] Close

26.6.18 இந்தநாள் உங்களுக்கு எப்படி? 


26-6-18-indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 26 Jun, 2018 07:28 am
  • அ+ அ-

மேஷம்:  எதையோ இழந்ததைப்போல் ஒருவித கவலை வந்து நீங்கும். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளைச் சொல்லி ஆதங்கப்படுவீர்கள். திடீர் பயணம் ஏற்படலாம்.


ரிஷபம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். சொந்தபந்தங்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி, குதூகலம் நிலவும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும்.


மிதுனம்: குடும்பத்தில் அமைதி ஏற்படும். நட்பு வட்டாரம் விரியும். கடன் பிரச்சினைகளைத் தீர்க்க மாற்றுவழி காண்பீர்கள். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நற்செய்திகள் வரும்.


கடகம்: பிரியமானவர்களின் சந்திப்பு எதிர்பாராமல் நிகழும். குடும்பத்திலுள்ளவர்களிடம் மனம் விட்டுப் பேசுவீர்கள். தாயின் உடல்நிலை சீராக இருக்கும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.


சிம்மம்: தன்னம்பிக்கை பிறக்கும். விடாப்பிடியாகச் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பணப்பற்றாக்குறை நீங்கும்.


கன்னி:  மனதில் பட்டதைப் பளிச்சென்று பேசுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உறவினர்களால் மனநிம்மதி கிட்டும். சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.


துலாம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களுக்காக தாராளமாகச் செலவு செய்வீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.


விருச்சிகம்: சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்று, நடப்பது வேறாக இருக்கும். குடும்பத்தில் சலசலப்பு வந்து போகும். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். 


தனுசு: அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். சுபச்செலவுகள் அதிகரிக்கும். திடீர் பயணங்கள் ஏற்படக் கூடும்.


மகரம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நண்பர்கள் வட்டாரம் விரியும். உடல்நிலை சீராக அமையும். உறவினர்களின் வருகையுண்டு. கனவுத் தொல்லை, தூக்கமின்மை விலகும்.


கும்பம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பழைய கடனை பைசல் செய்வதற்கான வழி பிறக்கும்.


மீனம்: திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பம் அமையும். குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிட்டும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும்.
 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close