[X] Close

24.6.18 இந்த நாள் உங்களுக்கு எப்படி? 


24-6-18-indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 24 Jun, 2018 08:20 am
  • அ+ அ-

மேஷம் :  உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். வாகனப் பழுது நீங்கும். மூத்த சகோதரர் ஆதரவாக இருப்பார். சாதுர்யமாகப் பேசி கடினமான காரியங்களையும் சுலபமாக முடிப்பீர்கள்.


ரிஷபம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு வாங்குவதற்கு வழி பிறக்கும். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில் எதிர்பாராத சந்திப்புகள் நிகழக் கூடும்.
 

மிதுனம்: உங்கள் புகழ், கவுரவம் உயரும். பிள்ளைகளால் வெளிவட்டாரத்தில் பெருமை ஏற்படும். சொந்தபந்தங்களின் சுயரூபத்தைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவீர்கள்.
 

கடகம் : வருமானம் உயரும். பிரபலமானவர்கள் உதவுவார்கள். பிள்ளைகள் உங்களின் அருமையைப் புரிந்து கொள்வார்கள். சொந்தபந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும்.
 

சிம்மம்: உங்கள் பலம், பலவீனத்தை உணர்வீர்கள் உறவினர்களில் நல்லவர்களைச் சேர்த்துக் கொள்வீர்கள். உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள்..
 

கன்னி : பணவரவு அதிகரிக்கும். சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேர்வீர்கள். முக்கியப் பிரமுகர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள். விருந்தினர் வருகை உண்டு.
 

துலாம் : வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். முன்பின் அறிமுகமில்லாதவர்களை வீட்டுக்குள் அழைத்துவர வேண்டாம். உங்கள் மீது சிலர் வீண்பழி சுமத்துவார்கள்.
 

விருச்சிகம் : அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கப் பாருங்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். சோர்வுடன் காணப்படுவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
 

தனுசு : பங்கு வர்த்தகம் லாபம் தரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களைக் கொண்டு சில காரியங்களை சாதித்துக் காட்டுவீர்கள். திருமணப் பேச்சுவார்த்தை கைகூடும். 
 

மகரம் : மனமகிழ்ச்சி, நிம்மதி கிட்டும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். தொட்ட காரியம் துலங்கும். வங்கிக் கடன் உதவி கிட்டும்.
 

கும்பம் : எதிர்பார்த்த பட்ஜெட்டில் வீடு, மனை அமையும். கல்யாணப் பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடியும். தந்தைவழி உறவினர்களுடன் சுமூகமான நிலை காணப்படும்.
 

மீனம்  : வாகனத்தில் செல்லும்போது செல்போனில் பேசுவதைத் தவிருங்கள். கடன் பிரச்சினைகளை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். பால்ய நண்பரைச் சந்தித்து மகிழ்வீர்கள்.
 

வாக்களிக்கலாம் வாங்க

'தும்பா' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close