[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 25 Jun, 2019 08:36 am
  • அ+ அ-

மேஷம்: அலைச்சல் இருக்கும். முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. சில காரியங்கள் பல்வேறு தடைகளுக்குப் பின்னர் நிறைவேறும். பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள்.

ரிஷபம்: வீட்டுக்குத் தேவையான மின்சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்களின் ஆதரவு உண்டு. தாய்வழி உறவினர்களுடன் சுமுகமான நிலை காணப்படும். பணவரவு திருப்தி தரும்.

மிதுனம்: மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். அரசாங்க அதிகாரிகளின் ஆலோசனைப்படி சொத்து தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். அக்கம்பக்கத்தினரின் ஆதரவு கிடைக்கும்.

கடகம்: நீண்ட நாட்களாக தாமதமாகிக் கொண்டிருந்த காரியங்கள் நிறைவடையும். பிரபலமானவர்களின் ஆதரவு கிட்டும். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடு நீங்கும்.

சிம்மம்: வீண் அலைச்சல், பணத்தட்டுப்பாடு ஏற்படும். அரசு காரியங்களில் அலட்சியம் காட்ட வேண்டாம். எதிர்பாராத மருத்துவச் செலவுகள், வீண்பழிகள் வந்து நீங்கும். திடீர் பயணம் உண்டு.

கன்னி: பால்ய நண்பர்களால் திடீர் திருப்பங்கள் ஏற்படும். சேமிக்கும் அளவுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகளுக்கு புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கித் தருவீர்கள்.

துலாம்: பிரபலங்களின் நட்பு கிட்டும். சகோதர, சகோதரிகள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

விருச்சிகம்: எதிர்பார்த்திருந்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். வீண் குழப்பங்கள் நீங்கும். சமூகத்தில் பிரபலமானவருக்கு நெருக்கமாவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

தனுசு: அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். நீண்டகாலமாக விலகியிருந்த உறவினர்கள், நண்பர்கள் மீண்டும் வருவார்கள். அக்கம்பக்கத்தினருடன் அளவாகப் பழகுங்கள்.

மகரம்: நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். மூத்த சகோதரர் வகையில் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். நவீன மின்சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

கும்பம்: புது முயற்சிகள் யாவும் வெற்றியடையும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். வாகனம் செலவு வைக்கும்.

மீனம்: எந்தக் காரியத்தையும் திட்டமிட்டு செய்வது நல்லது. குடும்பத்தாருடன் இணக்கமாகச் செல்லுங்கள். அடுத்தவர் மனம் காயப்படும்படி பேசாதீர்கள். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள். 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close