[X] Close

சர்வதேச யோகா தினம் இன்று!  எடையைக் குறைக்கும் ஈஸியான ஆசனம்! 


yoga-day-easy-aasanam

  • வி.ராம்ஜி
  • Posted: 21 Jun, 2018 06:55 am
  • அ+ அ-

    ஒல்லியாக இருப்பவர்கள் குண்டாக ஏங்குவார்கள்.  குண்டாக இருப்பவர்கள் ஒல்லியாக என்ன செய்வது என்று கைபிசைந்து தவிப்பார்கள். இவை... மனிதர்களின் காமெடிப் பக்கங்கள். ஆனாலும் பருமன்தான் பரம எதிரி. மனிதனுக்கு வரும் பலவகை நோய்களுக்கு இந்தப் பருமன் முக்கியக் காரணம்.
   இதை நாம் ஒரு பாரமாக நினைத்து நினைத்து அப்படியே பழகிப் போய்விட்டதால் எவ்வித நடவடிக்கைகளிலும் இறங்காமல் காலத்தை வீணடித்து, இதனால் பலவித இன்னல்களுக்கு ஆளாகிறோம். நம் கண்முன் தென்படும் பத்து பேரில் நிச்சயம் ஒருவராவது குண்டாக இருப்பார்கள். ஏன் இப்படி என்பதை பார்ப்போமா. 
நோய் வருவதற்கான காரணங்கள்:
நமது உடலின் திசுக்களில் கொழுப்புச் சத்து கூடும்போது உடல் பருமன் அடைகிறது. பொதுவாக உடல், உடலை வருத்தி வேலை பார்க்காத முக்கிய அலுவலர்களுக்கும் வீட்டில் உள்ள வேலைகளுக்கும் வேலைக்காரர்களை வைத்துவிட்டு, எவ்வித வீட்டு வேலைகளும் பார்க்காத வசதிபடைத்த பெண்களுக்கும் வருகின்றது உடல் பருமன். மேலும் நாளமில்லா சுரப்பிகளின் சீர்கேட்டாலும், குறிப்பாக தைராய்டு சுரப்பியின் மாற்றத்தாலும் சிறியவர் பெரியர் என அனைவருக்கும் இந்தப் பிரச்னை ஏற்படுகின்றது. பாரம்பரிய காரணங்களும் உண்டு. 
  கட்டுப்பாடற்ற கருத்தடை மாத்திரைகளும், வேறுசில நோய்களுக்கு நாம் உட்கொள்ளும் மாத்திரைகளும், ஆபரேஷன் முறைகளும் இதற்கு காரணமாக உள்ளது.
  அவ்வளவு ஏன்... உணவுமுறை காரணங்களும், உளவியல் காரணங்களும் முக்கிய பங்கு வகிக்கிறது. மாதவிலக்கு கோளாறு காரணங்களும், அது நின்றபின்னான உடற்கூறு காரணங்களும் பெண்களுக்கு உடல் பருமன் உண்டாக வாய்ப்புகள் மிக அதிகம்.
  மேலும் உடலுக்கு எவ்வித வேலையும் கொடுக்காமல் சரியான, முறையான உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கு உண்ணும் உணவிலிருக்கும் கலோரியின் தேவை குறைந்த அளவே போதுமானது. ஆனால் அவர்கள் உண்ணும் உணவுக்கும் அதிகப்படியான கலோரிகள், திசுக்களில் கொழுப்பாகச் சேர்ந்து, பின் உடல் பருமன் உண்டாகிறது. இதனால் பின் விளைவுகள் அதிகம். நுரையீரல் இயக்கம் தடைபட்டு மூச்சுத் திணறல் உண்டாகிறது. 
 சிறிது தூரம் நடந்தாலே மூச்சு வாங்கும். பிராண சக்தி சரியாக இயங்காது. அதனால் ரத்த ஓட்டம் பாதிக்கும். இதனால் இதயம் மற்றும் நுரையீரல்கள் பாதிப்படைந்து ரத்த அழுத்தம், மாரடைப்பு, நெஞ்சுவலி போன்றவையும் வரக்கூடும். ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகமானால் பித்தப் பையிலும் பாதிப்பு ஏற்படும். இடுப்பு முதுகெலும்பு, தண்டுவடப் பகுதிகளும் இயல்பான இயக்கத்துக்கு ஒத்துழைக்காது. மேலும் சர்க்கரை நோய், மூட்டுவலி போன்றவை வரக்கூடும்.
உணவு முறைகள்
சர்க்கரை, வெல்லம், இனிப்புப் பொருள்கள், பருப்பு வகைகள், நெய், வெண்ணெய், பலகாரங்கள், நொறுக்குத் தீனிகள், ஆட்டுக்கறி, கோழிக்கறி, முட்டை வகை, காரம், கடுகு, தயிர், காபி, டீ, ஐஸ்கிரீம், பாலாடை போன்றவற்றை உடன் விட்டுவிட வேண்டும்.
மூன்று வேளை உணவுகளில் ஒரு வேளை கண்டிப்பாக சமைக்காத உணவு அதாவது இயற்கை உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். கொழுப்புச் சத்து பொருள்களை அறவே விட்டுவிட வேண்டும். காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள் போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளவும். வேப்பங்கொழுந்து, முள்ளங்கி, புதினா, கொத்தமல்லி, சிறுவெங்காயம் போன்றவற்றை பச்சையாக உண்ணலாம்.
குறிப்பு: இரவு 10 மணிக்கு மேல் சாப்பிடுவதை கண்டிப்பாக நிறுத்த வேண்டும்.
ஆசனம்: பார்வை கோணாசனம்
செயல்முறை: நேராக நின்று கால்களை 2 அடி தூரம் விரித்துக் கொள்ளவும். வலது காலை  திருப்பி அதனை ÔடÕ போன்று மடக்கவும். வலது கை வலது காலின் அருகே தரையில் ஊன்றிக் கொள்ளவும். இடது, தலைக்கு மேலே நீட்டிக் கொண்டிருக்க வேண்டும். இடது கால் வளையாமல் நேராக இருக்க வேண்டும். சுவாசம் சாதாரண நிலையில் இருந்தால் போதும். இதே நிலையில் 50 விநாடிகள் இருக்க வேண்டும். இதேபோன்று இடது பக்கமும் செய்யவும். மொத்தம் மூன்று தடவை செய்ய வேண்டும்.
பயன்கள்:
இந்த ஆசனம் வலது பக்கம் போடும் பொழுது இடது கை, தோள் பட்டை பகுதியில், விலாப் பகுதிகள், அடி வயிறு, தொடைப் பகுதி மற்றும் கால் பகுதிகளும், இடது பக்கம் செய்யும் பொழுது வலது பக்க பகுதிகளும் குறைகின்றன. 
 ஏனென்றால் இந்த ஆசனம் மூலம் நுரையீரல் சக்தி பெற்று நல்ல முறையில் ரத்தத்தை சுத்தம் செய்து இதயத்திற்கு அனுப்புகின்றன. இதயத்திற்கு வருகின்ற சுத்தமான ரத்தம் உடலின் பிற பகுதிகளுக்கும் செல்கின்றன. ரத்தம் சுத்தமாக இருப்பதால், அதில் கழிவுகள் ஏற்படாது. 
அப்படியே கழிவுகள் இருந்தாலும் அவை உடனுக்குடன் வெளியேற்றப்படுகின்றன. அதிகப்படியான கொழுப்பு பகுதிகள் எரிக்கப்படுகின்றன. எனவே உடல் மெலிய தொடங்குகின்றன.
  சிறு துரும்பும் பல் குத்த உதவும். மிகப்பெரிய பருமனைக் கூட இந்த யோகாசனத்தின் மூலம் வெல்லலாம் என்று உறுதிபடச் சொல்கிறார்கள் பயிற்சியாளர்கள்!
 

வாக்களிக்கலாம் வாங்க

'சிந்துபாத்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close