[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 21 Jun, 2019 09:28 am
  • அ+ அ-

மேஷம்: உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.

ரிஷபம்: எதிலும் உங்கள் கை ஓங்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வாகனத்தைச் சீர் செய்வீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

மிதுனம்: அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியோ உத்தரவாதமோ தர வேண்டாம். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். திடீர் பயணம் உண்டு.

கடகம்: புது வாகனம் வாங்குவீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவார்கள். கணவன் - மனைவி இடையே நிலவிய மனக்கசப்பு நீங்கும்.

சிம்மம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பணபலம் உயரும். அரசியலில் செல்வாக்கு கூடும். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

கன்னி: உறவினர்களின் கனிவான விசாரிப்பால் ஆறுதல் அடைவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். மனைவிவழியில் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். திடீர் பயணம் உண்டு.

துலாம்: அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றுவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய ஈகோ பிரச்சினை தீரும்.

விருச்சிகம்: சவாலான காரியங்களைக்கூட சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். உங்களின் தனித்திறமை பளிச்சிடும். முக்கிய பிரமுகர்களால் பாராட்டப்படுவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

தனுசு: பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். சொந்தபந்தங்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள்.

மகரம்: உங்களுடன் பழகிக் கொண்டே உங்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்களை இனங்கண்டு அவர்களை ஒதுக்குவீர்கள். இடம், பொருள் ஏவலறிந்து பேசுவது பிரச்சினையைத் தவிர்க்கும்.

கும்பம்: வீண் வறட்டுக் கவுரவத்துக்காக சேமிப்புகளைக் கரைக்காதீர்கள். வேலைச்சுமை, திடீர் பயணங்கள் வந்து போகும். கடன் பிரச்சினை அதிகமாகும். விருந்தினர் வருகை உண்டு.

மீனம்: நவீன டி.வி., செல்போன் உள்ளிட்ட மின்சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். புது நட்பு மலரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close