[X] Close

வார ராசி பலன்கள் ஜூன் 20 முதல் 26 வரை (துலாம்  முதல் மீனம் வரை)


20-26

  • kamadenu
  • Posted: 20 Jun, 2019 11:34 am
  • அ+ அ-

-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் மறைந்திருந்தாலும் பாக்கியஸ்தானம் வலிமை பெறுவதால் தடைகள் அனைத்தையும் சமாளிக்கும் திறமை அதிகரிக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். பணியாளர்களால் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.

உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும். குடும்பத்தில் சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு மறையும். சொல்வன்மை அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பெண்கள் பயணம் செல்ல நேரலாம்.

அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வீர்கள். கலைத் துறையினருக்கு, பணவரவு இருக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை

எண்கள்: 2, 5, 6

பரிகாரம்: சுக்கிர பகவானைத் தீபம் ஏற்றி வணங்க எதிர்பார்த்த காரியங்கள் நன்றாக நடந்து முடியும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் குரு சஞ்சாரத்தால் நீங்கள் செய்யும் காரியங்கள் வெற்றியைத் தரும். பணவரவு வழக்கத்தை விட அதிகரிக்கும். செலவும் அதற்கேற்ப இருக்கும். சாதுர்யமாகப் பேசி வெற்றி காண்பீர்கள். பேச்சாற்றலால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இழுப்பீர்கள்.

குடும்பத்தில் மனம்மகிழும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். பெண்களுக்கு, பொறுப்புகள் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு, அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள்.

கலைத் துறையினருக்கு, அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். மாணவர்களுக்கு, கல்விச் செலவு கூடும். சகமாணவர்களிடம் அனுசரித்துச் செல்வதால் சாதகமான பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி

திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு நிறங்கள்: சிவப்பு, அடர் நீலம்

எண்கள்: 2, 9

பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வழிபட எல்லாப் பிரச்சினைகளும் தீரும்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியை செவ்வாய் பார்ப்பதால் தைரியம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை மிளிரும். எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். வாகனங்களில் செல்லும் போதும் ஆயுதங்களைக் கையாளும் போதும் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் நன்மை அளிக்கக்கூடிய வகையில் இருக்கும்.

தந்தைவழி உறவினர்களால் நன்மை இருக்கும். சகோதரர் வழியில் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும். உறவினர்கள் நண்பர்கள் வகையில் அனுகூலம் ஏற்படும். பெண்களுக்கு, பயணம் செய்யும் போது கவனம் தேவை. கலைத் துறையினருக்கு, புகழும் கௌரவமும் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு, சங்கடங்கள் குறையத் தொடங்கும். மாணவர்களுக்கு, விளையாட்டு நிகழ்ச்சிகளுக்காக வெளியூர்ப் பயணம் செல்லலாம்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

எண்கள்: 1, 3, 6

பரிகாரம்: சித்தர்களை வணங்கி வர மன அமைதி உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியை சுகாதிபதி செவ்வாய் பார்ப்பதால் பணவரவு அதிகரிக்கும்.. எடுத்த காரியத்தைச் செய்து முடிப்பதில் தாமதம் நீங்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். தொழில், வியாபாரம் வேகமாக இருக்கும்.

உத்தியோகஸ்தர்கள், மேலதிகாரிகளையும் சக பணியாளர்களையும் அனுசரித்துச் செல்ல வேண்டும். குடும்பத்தினருடன் வாக்குவாதம் வேண்டாம்.  உறவினர்கள், நண்பர்கள் அனுசரணையுடன் இருப்பார்கள். பெண்களுக்கு, எதிலும் காலதாமதம் உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு, கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் குறைவாகவே இருந்தாலும் பணவரவு சீராகவே தொடரும். மாணவர்களுக்கு, பாடங்களைப் படிப்பதில் மெத்தனம் வேண்டாம்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெளிர் நீலம், பச்சை

எண்கள்: 2, 5, 6

பரிகாரம்: வினாயகருக்குத் தீபம் ஏற்றி வழிபட எதிர்ப்புகள் விலகும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானம் வலிமையாக இருப்பதால் துணிச்சல் அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பலரும் உங்களைத் தேடி வருவார்கள். அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் உற்சாகம் உண்டாகும்..

மேலதிகாரிகள் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவீர்கள். உறவினர்கள், நண்பர்களின் ஆதரவும் கிடைக்கும். பெண்களுக்கு, சந்தோஷமான மனநிலை இருக்கும். அரசியல்வாதிகளின் பெயரும் புகழும் வளரும். கலைத் துறையினருக்கு உங்களின் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். மாணவர்களுக்கு, போட்டி, பந்தயங்களில் துணிச்சலுடன் ஈடுபட்டு சாதகமான நிலை காண்பீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: மேற்கு, தென்மேற்கு, வடகிழக்கு

நிறங்கள்: நீலம், பச்சை

எண்கள்: 2, 6

பரிகாரம்: எள் சாதம் சனி பகவானுக்கு நைவேத்தியம் செய்து காகத்துக்கு வைக்கக் கஷ்டங்கள் குறையும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் தனவாக்கு குடும்பாதிபதி செவ்வாய் குரு சாரம் பெற்றிருப்பதால் வாக்கு வன்மையால் நன்மை உண்டாகும். வீடு, மனை சம்பந்தப்பட்ட விஷயங்களில் சுணக்க நிலை மாறும். வாகனம் வாங்குவதில் ஏற்பட்டிருந்த தடைகள் நீங்கும். வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடும்.

குடும்ப உறுப்பினர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குழந்தைகளால் பெருமை சேரும். பெண்களுக்கு, காரியத் தடைகள் நீங்கும். அரசியல்வாதிகள் வீண் சச்சரவுகளில் சம்பந்தப்பட்டு மாட்டிக்கொள்ள வேண்டாம்.

கலைத் துறையினருக்கு, சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும். மாணவர்களுக்கு, படிக்காமல் விட்ட பாடங்களைப் படிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்றப் பாடுபடுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி

திசைகள்: வடக்கு, வடமேற்கு நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

எண்கள்: 1, 3

பரிகாரம்: குல தெய்வத்தை தீபம் ஏற்றி வணங்கி வருவது குழப்பத்தைப் போக்கும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close