ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழா தொடக்கம்


கோப்புப் படம்

ஏர்வாடி: ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகீம் ஷாகீது ஒலியுல்லாபாதுஷா நாயகம் தர்கா அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் சந்தனக்கூடு திருவிழா விமரிசையாக நடைபெறும்.

நடப்பாண்டு 850-வது சந்தனக்கூடு திருவிழா கடந்த 9-ம் தேதிபுகழ் மாலை (மவுலீது) ஓதப்பட்டு தொடங்கியது. நேற்று தர்கா மண்டபத்துக்கு எதிரே, கொடிமர மேடையில் அடிமரம் ஏற்றப்பட்டது. மாலை ஏர்வாடி குடியிருப்புப் பகுதியிலிருந்து கொடி ஊர்வலம்புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக தர்காவை அலங்கார ரதம்வந்தடைந்தது. தொடர்ந்து கொடிஏற்றப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் வரும் 31-ம் தேதி மாலை தொடங்கி, மறுநாள் அதிகாலை வரை நடைபெற உள்ளன.