[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 17 Jun, 2019 09:20 am
  • அ+ அ-

மேஷம்: அவ்வப்போது உணர்ச்சி வசப்படுவீர்கள். எதிலும் ஒரு பிடிப்பற்ற போக்கு நிலவும். செரிமானக் கோளாறு வந்து செல்லும். மாலை முதல் குழப்பம் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷபம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். உறவினர், நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். காரியங்களில் எச்சரிக்கை தேவை.

மிதுனம்: உங்களின் நிர்வாகத் திறமை, ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பிரபலமானவர்கள் அறிமுகமாவார்கள். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

கடகம்: எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் அதை தைரியமுடன் எதிர்கொண்டு சமாளிக்கும் மனோபலமும், வலிமையும் உண்டாகும். நவீன மின்னணு, மின்சார சாதனம் வாங்கி மகிழ்வீர்கள்.

சிம்மம்: எதையும் சாதித்து விடலாம் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். பிரபலங்கள் பக்கபலமாக இருப்பார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள்.

கன்னி: எதிலும் உங்கள் கை ஓங்கும். மனஉறுதி அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். புதிய யோசனைகள், திட்டங்கள் உதயமாகும்.

துலாம்: தடைகள் பல வந்தாலும் தளராமல், எடுத்த வேலையை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். திடீர் பயணம் உண்டு. கலைப்பொருட்கள் சேரும்.

விருச்சிகம்: உங்கள் திறமை மீது அவ்வப்போது உங்களுக்கே சந்தேகம் வரும். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர் கள். பிள்ளைகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பது நல்லது.

தனுசு: மனஇறுக்கம் வந்து செல்லும். நீண்டதூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வழக்கு விவகாரங்களில் வழக்கறிஞரைக் கலந்தோசித்து முடிவு எடுங்கள். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.

மகரம்: எதிர்ப்புகளை எளிதாக சமாளிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். பிரபலமானவர்கள் அறிமுகமாவார்கள். பங்கு வர்த்தகம் மூலம் பணம் வரும். பிள்ளைகளின் ஆசையைப் பூர்த்தி செய்வீர்கள். 

கும்பம்: கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதி கிடைக்கும். விருந்தினர் வருகை உண்டு. 

மீனம்: திட்டமிட்ட காரியங்கள் எவ்விதத் தடையுமின்றி நிறைவேறும். தொழிலதிபர்கள் அறிமுகமாவார்கள். தடைபட்டிருந்த வீடு கட்டும் வேலைகளை மீண்டும் தொடங்குவீர்கள்.
 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close