[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 15 Jun, 2019 09:16 am
  • அ+ அ-

மேஷம்: சகோதரர்களுடன் எதிர்பாராத வகையில் மனவருத்தம் வரும். பணப்பற்றாக்குறை ஏற்படும். மின்சார சாதனங்களை கவனமாகக் கையாளுங்கள். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

ரிஷபம்: எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் அதைத் தைரியமுடன் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் கிடைக்கும். நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். புது தெம்பு பிறக்கும்.

மிதுனம்: வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். அரசால் அனுகூலம் உண்டு. இழுபறியாக இருந்துவந்த வேலைகள் முடியும். தந்தைவழி உறவினர்களின் உதவி, ஆலோசனை கிடைக்கும்.

கடகம்: கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். அறிஞர்கள், சான்றோர்களின் நட்பு கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு பெரிய பொறுப்புகள் கிடைக்கும்.

சிம்மம்: சோர்வு களைப்பு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். புது முயற்சிகளில் உற்சாகமாக இறங்குவீர்கள். வீடு, மனை, வாகனம் விற்பது, வாங்குவது லாபகரமாக முடியும்.

கன்னி: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். நீண்டநாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். கலைப்பொருட்கள் சேரும்.

துலாம்: விருந்தினர் வருகையால் வீட்டில் குதூகலம் காணப்படும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். இந்தி, தெலுங்கு மொழி பேசுபவர்களால் சில காரியங்கள் நிறைவேறும்.

விருச்சிகம்: உடல் உஷ்ணத்தால் அவதி ஏற்படும். யாருக்கும், எதற்காகவும் உறுதிமொழியோ, உத்தரவாதமோ தர வேண்டாம். சொந்த ஊர் விஷயங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

தனுசு: அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. திடீர் பயணம் வரும். புது வேலையில் சென்று அமர்வீர்கள். நீண்ட காலமாக விலகியிருந்த உறவினர்கள், நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள்.

மகரம்: எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். நண்பர்களிடம் இருந்துவந்த பகை நீங்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். அக்கம்பக்கத்தினர் தக்க சமயத்தில் உதவுவார்கள்.

கும்பம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். எதிர்ப்புகள், ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். சகோதரர்களும் பக்கபலமாக இருப்பார்கள்.

மீனம்: தைரியமாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நிலம், வீடு, வாகனம் வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். கணவன் - மனைவி இடையே நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close