[X] Close

வார ராசி பலன்கள் ஜூன் 13 முதல் 19 வரை (துலாம்  முதல் மீனம் வரை)


13-19

  • kamadenu
  • Posted: 13 Jun, 2019 11:41 am
  • அ+ அ-

-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம் ராசி வாசகர்களே

(சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3-ம் பாதம்)

முடங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறும். எதிலும் கூடுதல் சிரத்தை தேவை. பணவரவு அதிகமாகும். உங்கள் செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகுவார்கள். மனம் விரும்பியதுபோல செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் சீராக நடக்கும்.

விரிவாக்கப் பணிகளை உடனடியாக மேற்கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் அழுத்தம் கொடுத்தாலும் நல்லபடியாக முடியும். மேலதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். குழந்தைகள் முன்னேற்றத்துக்குப் பாடுபடுவீர்கள்.

பெண்களுக்கு இருந்த தடைகள் நீங்கும். கலைத்துறையினருக்கு அன்பும் பாசமும் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் நண்பர்களை விட்டுப் பிரியலாம். புத்தகங்கள் கல்விக்கான உபகரணங்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வது நல்லது. பெற்றோர் ஆசிரியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடக்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

எண்கள்: 1, 3, 6

பரிகாரம்: மஹாலக்ஷ்மியை பூஜித்து வர, பொருள் வரத்து கூடும்.

விருச்சிக ராசி வாசகர்களே

(விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை)

ராசிநாதன் செவ்வாயில் மறைந்திருந்தாலும் அவருடைய பார்வையால் நல்ல பலன் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவ ஆர்வம் அதிகரிக்கும். எதிலும் சற்றுக் கவனம் தேவை. வீண் பிரச்சினைகளில் ஈடுபட வேண்டாம். வழக்குகள் சாதகமாக இருக்கும்.

புதிய ஆர்டர்களைப் பெற அலைச்சல் கூடும். உத்தியோகஸ்தர்கள் மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த பணியிட மாற்றம் கிடைக்கும். சம்பள உயர்வு கிடைக்கும். குடும்பத்திலிருந்து பிரிந்து சென்றவர் மீண்டும் சேருவார். உடன்பிறப்புகளோடு இருந்துவந்த பிணக்குகள் மறையும்.

பெண்கள் எக்காரியத்தையும் கவனத்துடன் செய்வது நல்லது. கலைத்துறையினருக்குப் பொருளாதாரப் பிரச்சினைகள் இருக்காது. பிரிந்து சென்ற அரசியல்வாதிகள் ஒன்றுகூடுவார்கள். மாணவர்கள் பாடங்களை நிதானமாகப் படித்து பதிய வைத்துக்கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

திசைகள்: வடக்கு, கிழக்கு

நிறங்கள்: சிவப்பு, பச்சை

எண்கள்: 5, 9

பரிகாரம்: துர்க்கையம்மனை எலுமிச்சை தீபம் ஏற்றி வணங்க எதிர்ப்புகள் விலகும்.

தனுசு ராசி வாசகர்களே

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்)

சூரியன், செவ்வாய், புதன் உங்கள் ராசியை ஏழாம் பார்வையாகப் பார்க்கிறார்கள். அனைத்து வகையிலும் இது நிம்மதியும் மகிழ்ச்சியும் கொடுக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் உதவிகள் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். வீடு கட்ட எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். வழக்குகள் சாதகமாக முடியும்.

தொழில், வியாபாரம் சுமாராக இருந்தாலும் லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் உதவி கிடைக்கும். குடும்ப வேலைகளுக்குக் கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டிவரும். கணவன்-மனைவி இடையே மன வருத்தம் நீங்கும். கலைத்துறையினர் பொறுமையுடன் செயல்பட வேண்டும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்துடன் இருந்துவந்த கருத்து மோதல்கள் நீங்கும். மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு, வடகிழக்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

எண்கள்: 1, 3, 6

பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி கொண்டைக்கடலை சுண்டல் நைவேத்தியம் செய்து விநியோகம் செய்ய, செல்வம் சேரும்.

மகர ராசி வாசகர்களே

(உத்திராடம் 2,3,4; திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

உங்கள் ராசியை சுகாதிபதிபதி செவ்வாய் பார்ப்பதால் நினைத்த காரியங்கள் முடியும். தன்னம்பிக்கை கூடும். திட்டங்கள் நிறைவேறும். நண்பர்கள் உதவியுடன் காரியங்களை முடிப்பீர்கள். இழுபறியாக இருந்த காரியம் நடைபெறும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். வழக்கு சாதகமாகும். தொழில் வியாபாரத்தில் மந்தமான நிலை மாறும். வர வேண்டிய பணம் கிடைக்கும். பங்குதாரர்களிடம் பிரச்சினைகள் அகலும். உத்தியோகஸ்தர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும்.

சுபகாரியத் தடைகள் அகலும். பெண்களுக்கு மனதில் தைரியமும் மகிழ்ச்சியும் உண்டாகும். கலைத்துறையினர் ஓய்வில்லாமல் உழைக்க நேரும். கூடுதல் வருமானம் வரும். அரசியல்வாதிகள் மேலிடத்துடன் எச்சரிக்கையாக இருக்கவும். மாணவர்களுக்குப் படிப்பில் கவலை நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

திசைகள்: தென்மேற்கு, தென் கிழக்கு, மேற்கு

நிறங்கள்: நீலம், பச்சை

எண்கள்: 6, 9

பரிகாரம்: விநாயக ருக்கு நெய்தீபம் ஏற்றி வர, கடன் தொல்லை குறையும். காரியத் தடை நீங்கும்.

கும்ப ராசி வாசகர்களே

(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)

வாக்கு ஸ்தானத்தை அதன் அதிபதி குரு பார்ப்பதால் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். அதனால் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். பணவரவு திருப்தி தரும். சிக்கலான விஷயங்களைச் சாதூரியமாகப் பேசி முடிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்குப் பாராட்டு கிடைக்கும். உறவினர்கள் வருவார்கள். வீண் பேச்சுக்களைக் குறைத்தால், குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு உண்டு. கோபத்தை தவிர்ப்பது நல்லது. நண்பர்களிடம் கவனமாகச் செயல்படவும்.

பெண்கள் பயணம் செல்ல நேரிடலாம். கலைத்துறையினருக்குத் தொழிலில் சிக்கல்கள் உருவாகாது. அரசியல்வாதிகள் விடாப்பிடியாகச் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய பாடுபடுவீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, நீலம்

எண்கள்: 2, 3, 6

பரிகாரம்: ஆஞ்சனேயருக்குத் துளசிமாலை அணிவித்து அர்ச்சனை செய்து வணங்க, குடும்ப கஷ்டங்கள் நீங்கும்.

மீன ராசி வாசகர்களே

(பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

ராசிநாதன் குரு பார்ப்பதால் நீண்ட நாட்களாக இருந்துவந்த தொய்வு நிலை நீங்கும். எந்த ஒரு விஷயத்தையும் கவனமுடன் கையாள்வீர்கள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். தொழில், வியாபாரம் விறுவிறுப்படையும்.

மந்த நிலை அடியோடு மாறும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்லவும். தொழில் முயற்சிகள் வெற்றி பெறும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் சொல்படி நடந்துகொள்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும். குடும்பத்தில் கலகலப்பு இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் எதையும் பேசி ஆலோசித்து செயல்படுங்கள்.

பெண்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு வாழ்க்கையில் பிடிப்பும் ஆர்வமும் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு நிலவிய பிரச்சினைகள் மறையும். பாடங்களைப் படிப்பதில் மாணவர்களுக்குச் சுறுசுறுப்பு காணப்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்;

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்

எண்கள்: 1, 3

பரிகாரம்: அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட, துன்பங்கள் விலகும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close