[X] Close

வார ராசி பலன்கள் ஜூன் 13 முதல் 19 வரை (மேஷம்  முதல் கன்னி வரை)


13-19

  • kamadenu
  • Posted: 13 Jun, 2019 11:31 am
  • அ+ அ-

-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷ ராசி வாசகர்களே

(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்)

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாயின் குரு சார சஞ்சாரத்தின் மூலம் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பேசும்போது கவனம் தேவை. வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். சொத்து விஷயங்களில் சுணக்க நிலை மாறும். தொழில், வியாபாரம் நிதானமாகவே நடக்கும்.

உபதொழில் தொடங்கும் சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கும். சக ஊழியர்கள் அனுசரணையாக இருப்பார்கள். குடும்பத்தில் கலகலப்பு கூடும். வாழ்க்கைத்துணை அனுசரித்து செல்வார். பெண்களுக்கு மனக்கவலைகள் நீங்கும்.

கலைத்துறையினருக்குப் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். அரசியல்வாதிகள் நல்ல பெயர் எடுப்பார்கள். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சந்தேகங்கள் உண்டாகலாம். அவற்றை உடனே தீர்த்துக்கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

திசைகள்: கிழக்கு, வடக்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்

எண்கள்: 1, 3, 9

பரிகாரம்: முருகனுக்கு அர்ச்சனை செய்து வணங்க எல்லா கஷ்டங்களும் நீங்கி மன அமைதி உண்டாகும்.

ரிஷப ராசி வாசகர்களே

(கார்த்திகை 2, 3, 4 ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் ராசியிலேயே இருப்பதால் பணவரத்து அதிகரிக்கும். சுணங்கிய காரியங்கள் வேகம் பெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல பலன் கிடைக்கும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணவரத்து திருப்தி தரும்.

தனஸ்தானத்தில் ஆட்சியாக இருக்கும் புதனால் புத்திசாதூர்யத்தால் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். வாழ்க்கைத்துணையுடன் வாக்குவாதம் வேண்டாம். வழக்குகள் சாதகமாக முடியும். கிடப்பில் கிடந்த காரியங்கள் முடிவுக்கு வரும்.

பெண்களின் முயற்சிகளுக்குப் பலன் கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். கலைத்துறையினருக்கு நிதானம் தேவை. மதிப்பெண் பெற மாணவர்கள் எடுக்கும் முயற்சி வெற்றி பெறும். வீண் கவலை வேண்டாம்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை

எண்கள்: 3, 6, 9

பரிகாரம்: நவகிரகத்தில் சுக்கிரனுக்கு வெண்மொச்சை சுண்டலை நைவேத்யம் செய்து விநியோகம் செய்தால் பணத் தட்டுப்பாடு நீங்கும்.

மிதுன ராசி வாசகர்களே

(மிருகசிரீஷம் 3, 4; திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

இந்த வாரம் பணவரத்து அதிகரிக்கும். ராசியில் சஞ்சரிக்கும் சூரியன், செவ்வாய் மூலம் எடுத்த காரியங்கள் கைகூடும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். எதிர்ப்புகள் விலகும். பயணம் மூலம் லாபம் கூடும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளைக் கவர்வார்கள். குடும்பத்திலிருந்த இறுக்கம் நீங்கி மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கலாம். உறவினர் உதவுவார்கள். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

பிள்ளைகளுக்கு வசதிகளைச் செய்து கொடுப்பீர்கள். பெண்களின் முயற்சிக்குப் பலன் கிடைக்கும். கலைத்துறைகளைச் சார்ந்தவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். அரசியல்வாதிகளுக்கு அலைச்சல் கூடும். மாணவர்கள், மற்றவர்கள் பேச்சைக் கேட்கும் முன் யோசிப்பது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: பச்சை, மஞ்சள்

எண்கள்: 3, 5

பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாளை மரிக்கொழுந்து அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வழிபட துன்பங்கள் நீங்கும்.

கடக ராசி வாசகர்களே

(புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்)

இந்த வாரம் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரத்து இருக்கும். எதிர்ப்புகள் விலகும். தடைபட்ட காரியங்களைச் செய்து முடிக்க முயற்சிகள் மேற்கொள்வீர்கள். மனத்தில் புதிய உற்சாகமும் தைரியமும் உண்டாகும். தொழில் வியபாரத்தில் போட்டி குறையும்.

பங்குதாரர்களிடமிருந்த பிணக்குகள் அகலும். தொழிலில் புதிய உபகரணங்கள் வாங்க வசதிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்குப் பிரச்சினைகள் குறையும். அலுவலக ரீதியான பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். குடும்பப் பிரச்சினைகள் குறையும். மனகசப்பு மாறும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் உதவி கிடைக்கும்.

பெண்கள் தடைபட்ட காரியங்களைச் செய்து முடிக்க முயற்சிப்பீர்கள். கலைத்துறையினருக்குப் புதிய மாற்றம் உருவாகும். அரசியல்வாதிகளுக்குப் பணப்புழக்கம் அதிகரிக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி;

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, நீலம்

எண்கள்: 2, 3

பரிகாரம்: ஆதிபராசக்திக்கு வேப்பிலை அர்ப்பணித்து வழிபட்டு வர, காரியத் தடை நீங்கும்.

சிம்ம ராசி வாசகர்களே

(மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்)

இந்த வாரம் ராசிநாதன் சூரியன் செவ்வாய் சாரம் பெற்று லாப ஸ்தானத்தில் இருப்பது மனத்தில் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். தெளிவு உண்டாகும். நல்லது கெட்டதைப் பிரித்துப் பார்த்து செயல்படுவீர்கள். எதிர்பாராத திருப்பங்களால் காரிய வெற்றி கிடைக்கும்.

தொழில், வியாபாரம் திருப்தி தரும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும்.  உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். திடீர் சுபச்செலவு ஏற்படும். குடும்பத் தேவைகளை நிறைவேற்றி குடும்பத்தினரின் மதிப்பை பெறுவீர்கள்.

வழக்குகளிலிருந்த தொய்வு நீங்கும். பெண்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியத்தைச் சாதிப்பார்கள். கலைத்துறையினர் பணப்பற்றாக் குறை யைச் சந்திக்கலாம். எடுத்த காரியங்களில் அரசியல்வாதிகளுக்கு வெற்றி கிட்டும். கல்வியில் வெற்றி பெற மாணவர்கள் கூடுதல் முயற்சி மேற்கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்

எண்கள்: 1, 3, 9

பரிகாரம்: வில்வ அர்ச்சனை செய்து சிவனை வணங்க, நன்மைகள் உண்டாகும்.

கன்னி ராசி வாசகர்களே

(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

நீண்ட நாட்களாக இருந்த சுணக்க நிலை மாறும். பணவரத்து கூடும். எதிர்ப்புகள் விலகும். தடைபட்ட காரியத்தைச் செய்து முடிக்க முயற்சிப்பீர்கள். வெளியூர் தகவல்கள் சாதகமாக இருக்கும். சொத்து, வீடு வாங்க தடைகள் நீங்கும். தொழில், வியாபாரப் பணிகள் வேகமாக நடைபெறும்.

தடைகள் அகலும். வியாபாரம் பெருகி பணவரத்து இருக்கும். பணி நிமித்தமாக வெளியூர்ப் பயணம் இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். வழக்குகளில் காலதாமதம் ஏற்படும். பேசும்போது கவனம் தேவை.

சேமிப்பு விஷயங்களில் பெண்களுக்கு அதிக கவனம் தேவை. கலைத்துறையினர் நன்மைகளைத் தடையின்றி அடைவீர்கள். அரசியல்வாதிகளுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். மாணவர்களுக்கு பாடங்களைப் படிப்பது பற்றிய கவலை நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன், வெள்ளி;

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: பச்சை

எண்கள்: 5, 9

பரிகாரம்: விஷ்ணு சகஸ்ர நாமம் படித்து பெருமாளை வழிபட, காரிய வெற்றி உண்டாகும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close