[X] Close

தாமரைத் திரியால் விளக்கேற்றினால் பதவி உயர்வு நிச்சயம்!  


  • வி.ராம்ஜி
  • Posted: 11 Jun, 2019 16:10 pm
  • அ+ அ-

-வி.ராம்ஜி

சுவாமிக்கு விளக்கு ஏற்றி வழிபடுவதே விசேஷம்தான். அதிலும் குறிப்பிட்ட திரியைக் கொண்டு விளக்கேற்றுவதும் வழிபடுவதும் இன்னும் இன்னுமான பலன்களைத் தந்தருளும் என்கின்றன ஞானநூல்கள்.

வீட்டில், காலையும் மாலையும் விளக்கேற்றுவதும் நடைமுறையில் இருப்பதுதான். இன்னும் சிலர், வீட்டுப் பூஜையறையில் விளக்கேற்றுவதுடன் வீட்டு வாசலிலும் மாலைவேளையில் விளக்கேற்றுவார்கள். இது, வீட்டுக்கு மகாலக்ஷ்மியை வரவழைக்கும் செயல் என்றும் இதில் மகிழ்ந்து ஸ்ரீதேவி உள்ளே நுழைவாள் என்றும் மூதேவி வீட்டில் இருந்து வெளியேறி விடுவாள் என்றும் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

சரி... என்னென்ன திரி கொண்டு விளக்கேற்றினால், என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

பஞ்சு மூலம் செய்யப்பட்ட திரியைக் கொண்டு விளக்கேற்றி வந்தால், குடும்பத்தில் நிகழும் எல்லாச் செயல்களும் இனிதே நடந்தேறும். எல்லாச் செயல்களும் வெற்றியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும்.

வாழை நார் மூலம் கொண்ட திரியில் விளக்கேற்றி வழிபட்டால், முன் ஜன்மத்து சாபமெல்லாம் நீங்கும். எந்தக் குறைவுமில்லாத நிலையில், குடும்பம் சீரும்சிறப்புமாக செழித்தோங்கும்.

தாமரைத் தண்டு திரி கொண்டு விளக்கேற்றி வழிபட்டு பிரார்த்தனை செய்து வந்தால், முன்வினைகள் யாவும் தீரும். நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் மதிப்பும் மரியாதையும் கூடும். புகழும் கெளரவமும் கிடைத்து, பதவி உயர்வுடன் திகழலாம்.

புதிய மஞ்சள் துணியால் திரி செய்து விளக்கேற்றினால், தீராத நோயும் தீரும். உடல் ஆரோக்கியத்துடனும் மனத்தெளிவுடனும் வாழலாம். மருந்து மாத்திரைகளுக்கு என செலவழித்த நிலையெல்லாம் மாறும்.

வெண்மை நிறத் துணியால் திரி செய்து விளக்கேற்றி வழிபட்டால், எல்லா தருணங்களிலும் காரியங்கள் ஜெயமாகும். நற்பலன்கள் கிடைத்துக்கொண்டே இருக்கும்.

சிகப்புநிறத் துணியால் திரி செய்து விளக்கேற்றி பூஜித்து வந்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும். சந்ததி செழித்து வளரும்.

கருப்புத்துணியால் திரி செய்து விளக்கேற்றினால், சனீஸ்வரரின் பேரருளைப் பெறலாம். சனியின் கோபத்தில் இருந்து தப்பிக்கலாம். குறிப்பாக, சனீஸ்வரருக்கான கருப்புத் துணி திரியுடன் எள்ளும் சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு விளக்கேற்ற வேண்டும். இதனை கோயிலில், சனீஸ்வரருக்கு ஏற்றி வழிபடுவதே சிறப்பு. வீட்டில் எள்ளும் கருப்புத்துணியும் கொண்டு ஏற்றுவதை தவிர்ப்பதே உத்தமம் என்கின்றனர் ஆச்சார்யர்கள்.

 

 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close