[X] Close

சிவன், அம்பாள், முருக தரிசனம்! மாதசிவராத்திரி, செவ்வாய், கார்த்திகை விரதம்!


madha-sivarathiri-sevvai-karthigai

  • வி.ராம்ஜி
  • Posted: 11 Jun, 2018 14:13 pm
  • அ+ அ-

நாளைய தினம் ஆலய தரிசனம்... அற்புத விசேஷம்! 

வரம் தரும் வைகாசி என்பார்கள். இந்த வைகாசியில் நாளைய தினம் 12.6.18 செவ்வாய்க்கிழமை அற்புதமான நாள். சிவனார், அம்பாள், முருகப்பெருமான் ஆகியோரை வணங்குங்கள். சகல யோகங்களும் கிடைத்து இனிதே வாழ்வீர்கள் என்பது உறுதி!

வைகாசி மாதத்தின் கடைசிச் செவ்வாய் நாளைய தினம். செவ்வாயும் வெள்ளியும் அம்பாளுக்கு உகந்தவை. எனவே அருகில் உள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று அன்னையைத் தரிசிப்பது நல்லது. மிகவும் பலமும் நலமும் தந்தருள்வாள் தேவி!

அதேபோல், மாதந்தோறும் வருகிற மாத சிவராத்திரியும் நாளைய தினமான 12ம் தேதி வருகிறது. ஆகவே நாளைய தினம் சிவராத்திரி விரதம் மேற்கொள்ளலாம். இயலாதவர்கள், ருத்ரம் முதலான சிவ ஸ்லோகங்களைச் சொல்லிப் பாராயணம் செய்யலாம். சிவாலயம் சென்று வில்வம் வழங்கி ஈசனை வழிபடலாம். தோஷங்கள் அனைத்தும் விலகும். சந்தோஷம் பூரணமாகக் கிடைத்து இனிதே வாழலாம் என்பது ஐதீகம்!

அடுத்து, பொதுவாகவே செவ்வாய்க்கிழமை, கந்தவேலனுக்கு உரிய நாளும் கூட! போதாக்குறைக்கு, நாளைய தினம் 12ம் தேதி செவ்வாய்க்கிழமை, கார்த்திகை விரத நாளும் சேர்ந்து வருவது சிறப்பு. ஆகவே, கார்த்திகை விரத நன்னாளில், முருகக் கடவுளைத் தரிசியுங்கள். முடிந்தவர்கள் விரதம் மேற்கொள்ளுங்கள். இயலாதவர்கள், அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று, செவ்வரளி மாலை சார்த்தி, சர்க்கரைப் பொங்கல் அல்லது எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்கு வழங்குங்கள். எதிரிகள் தொல்லை ஒழித்து, எதிர்ப்புகள் விலக்கி, காரியத்தில் வெற்றியைத் தந்தருள்வார் கந்தவேள் என்கின்றனர் பக்தர்கள்.

வைகாசிச் செவ்வாய், மாத சிவராத்திரி, கார்த்திகை விரதம்... அம்பாள், சிவனார், முருகப்பெருமான் ஆகியோரை நாளைய தினம் செவ்வாய்க்கிழமை (12ம் தேதி) மறக்காமல் தரிசனம் செய்யுங்கள். மங்கல காரியம் இல்லத்தில் நடந்து, சுபிட்சம் நிலவட்டும்!

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close