[X] Close

சுபிட்சம் தரும் சோம வாரப் பிரதோஷம்! மறக்காம சிவ தரிசனம் செய்யுங்க!


soma-vaara-pradhosham

திருப்பட்டூர் - பிரம்மபுரீஸ்வரர் கோயில் நந்தி.

  • வி.ராம்ஜி
  • Posted: 11 Jun, 2018 12:35 pm
  • அ+ அ-

பிரதோஷத்தன்று சிவாலயம் செல்வதும் சிவ தரிசனம் செய்வதும் மிகுந்த பலனைத் தரும் என்பதெல்லாம் நமக்குத் தெரிந்ததுதானே!

பிரதோஷ நாளில், மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான பிரதோஷ வேளையில், சிவாலயம் சென்று நின்றாலே பாதிப் புண்ணியம் கிடைத்துவிடும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

இதோ... இன்று (11.6.18) பிரதோஷம். சோம வாரப் பிரதோஷம். திங்கட்கிழமையை சோம வாரம் என்பார்கள். ஆகவே இதை சோமவாரம் என்றும் சோம வாரப் பிரதோஷம் என்றும் சொல்வார்கள். பிறை எனப்படும் சந்திரனை தன் தலையில் வைத்திருக்கும் சோம நாதனுக்கு, சோமேஸ்வரனுக்கு இந்த சோம வாரப் பிரதோஷம் என்பது ரொம்பவே விசேஷமானது.

மேலும் இது வைகாசி மாதத்தின் நிறைவுப் பிரதோஷமும் கூட. எனவே, இந்தநாளில், இன்றைய தினத்தில், மாலை வேளையில் அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் செல்லுங்கள். நந்திதேவருக்கும் சிவலிங்கத் திருமேனிக்கும் விமரிசையாக அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். முடிந்தால், அபிஷேகப் பொருட்கள் வாங்கிக் கொடுங்கள். செந்நிற மலர்களும் வில்வமும் நந்திதேவருக்கு அருகம்புல்லும் வழங்கி பூஜியுங்கள்.

பிரதோஷத்தில், நந்திதேவரிடமும் சிவனாரிடமும் நீங்கள் வைக்கிற எந்த வேண்டுதலும் விரைவில் நடந்தேறுவது உறுதி. நம் வாழ்வையே சுபிட்சமாக்கித் தந்தருள்வார் சிவனார். எல்லாக் கஷ்டங்களையும் போக்கி அருள்வார் ஈசன்.

சுபிட்சம் தரும் சோம வாரப் பிரதோஷத்தில், சிவ தரிசனம் செய்ய மறக்காதீங்க!

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close