[X] Close

வார ராசி பலன்கள் ஜூன் 06 முதல் 12 வரை (மேஷம் முதல் கன்னி வரை)


06-12

  • kamadenu
  • Posted: 06 Jun, 2019 11:14 am
  • அ+ அ-

-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் எதைத் தொட்டாலும் வெற்றிக்கனியை ருசிப்பீர்கள். எதிர்பார்த்தபடி தனவரவுகள் வந்துகொண்டிருக்கும். தொழிலில் அனுகூலமான செய்திகள் தேடி வரும். வழக்குகளில் வெற்றி கிட்டும். வேலை வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்குத் தகுந்த வேலை கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகன்று நிம்மதி பிறக்கும். உங்கள் அந்தஸ்தும் சமுதாயத்தில் உயரும். பெண்கள், தாய் மற்றும் தாய் வழி உறவினர்கள் மூலம் பாசம் அன்பு பெறுவீர்கள்.

கலைத் துறையினருக்கு, தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சில வாக்குவாதங்கள் இருக்கும். அரசியல்வாதிகள் விடாப்பிடியாகச் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். யாருக்கும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். மாணவர்கள் படிப்பினில் சாதனைகள் புரிவர். எதிர்நோக்கியிருக்கும் சவால்களையும் முடிப்பீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன். திசைகள்: கிழக்கு, தெற்கு. l எண்கள்: 1, 3, 9. l நிறங்கள்: சிவப்பு. l பரிகாரம்: துர்க்கை அம்மனைத் தரிசனம் செய்து தீபம் ஏற்றி வர காரியத் தடைகள் நீங்கும்.

 

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்குக் கை கொடுப்பார்கள். மனத்தில் இருந்துவந்த சஞ்சல மனநிலையில் மாற்றம் இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். பெண்களுக்கு, நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

கலைத் துறையினருக்கு, கடுமையான வேலைப்பளு ஏற்படும். நேரம் தவறி சாப்பிட வேண்டாம். அரசியல்வாதிகளுக்கு, வீண் விவாதங்கள் ஏற்படலாம். கையிருப்புகள் கரையும். கடன் வாங்க நேரிடும். மாணவர்களுக்கு, பாடங்களைப் படிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். சக மாணவர்களின் ஒத்துழைப்பு மனதிருப்தியைத் தரும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி. l திசைகள்: தெற்கு, தென்மேற்கு. l எண்கள்: 2, 6. l நிறங்கள்: வெள்ளை, பச்சை. l பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரைத் தரிசித்து வர பாவங்கள் நீங்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும்.

 

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிர்பார்த்தபடி பணம் மட்டும் கைக்கு வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் உங்களது நேர்மையான முன்னேற்றம் எந்தத் தடங்கல்கள் வந்தாலும் சாதிப்பீர்கள். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். குடும்ப நிலைகளில் இருந்துவந்த தேக்கநிலை மாறி உற்சாகம் பிறக்கும். பேசப்பட்டுக்கொண்டிருந்த சுபகாரியங்களில் சிக்கல்கள் விலகும். பெண்களுக்கு, பிள்ளைகள் உங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுப்பர். பிள்ளைகளுக்காகப் புதிய கடன்கள் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் வரலாம்.

கலைத் துறையினருக்கு, சக கலைஞர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இலக்கியத் துறையினருக்கு, புகழ் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு, தங்கள் இருப்பை மேலிடத்தில் சொல்வதற்கு ஏற்ற காலகட்டம். புதிய உத்திகளைக் கையாண்டு அசத்துவீர்கள். மாணவர்களுக்கு, தேர்வில் நல்ல தேர்ச்சி கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி. l திசைகள்: மேற்கு, வடக்கு. l எண்கள்: 2, 5, 6. l நிறங்கள்: பச்சை, வெள்ளை. l பரிகாரம்: ஸ்ரீநரசிம்மரைத் தீபம் ஏற்றி தரிசித்து வர கடன் பிரச்சினை குறையும்.

 

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் இருந்த தடுமாற்றம் நீங்கும். எதிர்ப்புகள் குறையும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் டென்ஷனுடன் காணப்படுவார்கள். நீண்ட நாட்களாக இருந்துவந்த மனக்கிலேசங்களில் தெளிவான நிலை ஏற்படும். நண்பர்கள் உறவினர்களிடம் சிறு மனத்தாங்கல்கள் வரலாம். பெண்களுக்கு, எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மன உறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

கலைத் துறையினருக்கு, எந்த ஒரு முடிவையும் கலந்தாலோசிக்காமல் எடுக்காதீர்கள். தடைபட்ட வாய்ப்புகள் கூடிவரும். அரசியல்வாதிகள் கனிவாகப் பேசுங்கள். முடிந்தவரை கடன் தருவதைத் தவிர்க்கப் பாருங்கள். மாணவர்களுக்கு, கல்வி பற்றிய கவலை ஏற்படும். பதற்றத்தைக் குறைத்துப் பாடங்களில் கவனம் செலுத்திப் படிப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன். l திசைகள்: வடக்கு, வடகிழக்கு. l எண்கள்: 2, 3, 9. l நிறங்கள்: வெள்ளை, நீலம். l பரிகாரம்: முருகனை வணங்குவதன் மூலம் அனைத்துக் காரியங்களும் தங்கு தடையின்றி நடைபெறும்.

 

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் சாதனைகள் புரிவீர்கள். மனத்தில் உற்சாகம் பிறக்கும். சில மாற்றங்கள் வந்து சேரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் நிலம், வீடு, வாகனங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிருந்து உங்களை விடுவிப்பதற்கு வழிகள் வந்து சேரும். ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புகளும் வந்து சேரும். உங்கள் தன்னம்பிக்கை, திறமை அதிகரிக்கும். பெண்கள் கூடிய மட்டிலும் அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதைத் தவிருங்கள். கலைத் துறையினர் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

சோதனைகள் வெற்றியாக மாறும். அரசியல்வாதிகளுக்கு, பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். மாணவர்களுக்கு, எதிர்காலப் படிப்புகளுக்கான பணிகளை இப்போதே ஆரம்பிக்கலாம். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன். l திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு. l எண்கள்: 1, 3, 9. l நிறங்கள்: சிவப்பு, மஞ்சள். l பரிகாரம்: சிவனுக்கு வில்வ இலைகளை அர்ப்பணித்து வணங்குங்கள்.

 

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் நிதானமாக எந்த முடிவையும் எடுப்பீர்கள். தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, வேலைப் பளு, வீண் அலைச்சல் குறையும். சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பெண்களுக்கு, உங்களது முயற்சிகளுக்கு இருந்த முட்டுகட்டைகள் அகலும்.

கலைத் துறையினருக்கு, அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லிக்கொண்டிருக்காதீர்கள். அரசியல்வாதிகள் ஒப்பந்தப் பத்திரங்களில் கையெழுத்திடும் முன் ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும். தலைமையுடன் கருத்து வேறுபாடுகள் வந்து போகும். மாணவர்களுக்கு, கல்வி பற்றிய பயம் நீங்கும். ஆசிரியர்களின் உதவி கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி. l திசைகள்: தெற்கு, தென்மேற்கு. l எண்கள்: 5, 6. l நிறங்கள்: வெள்ளை, பச்சை. l பரிகாரம்: பெருமாளை பூஜித்து வர நன்மையுண்டு. கோவில் திருப்பணிகளில் பங்கு பெறுங்கள்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close