[X] Close

வார ராசி பலன்கள் ஜூன் 06 முதல் 12 வரை (துலாம்  முதல் மீனம் வரை)


06-12

  • kamadenu
  • Posted: 06 Jun, 2019 11:14 am
  • அ+ அ-

-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம் ராசி வாசகர்களே

தடைபட்டிருந்த அனைத்துக் காரியங்களும் இந்த வாரம் அடுத்தடுத்து நடைபெறப் போகிறது. உத்தியோகஸ்தர்கள் புதிய வழக்குகளை சந்திக்க நேரிடலாம். வேலை நிமித்தமாக வெளிநாட்டுக்குப் பயணம் செல்ல வேண்டி வரலாம். குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் மட்டற்ற மகிழ்ச்சிகள் வந்து சேரும். உங்கள் பக்கமுள்ள நியாயம் ஓங்கும். பெண்கள் திருமண பாக்கியம் கைகூடி வரும். சந்தான பாக்கியம் கிட்டாதவர்களுக்கு வரப்பிரசாதம் கிடைக்கும்.

கலைத் துறையினர் பொறுமையுடன் செயல்பட வேண்டும். மறைமுக போட்டிகளால் நெருக்கடிகளைச் சந்திக்கலாம். அரசியல்வாதிகளுக்கு, சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். மேலிடத்துடன் இருந்துவந்த கருத்து மோதல்கள் நீங்கும். மாணவ கண்மணிகளுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். நினைத்த மதிப்பெண்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி. l திசைகள்: மேற்கு, தெற்கு. l எண்கள்: 2, 5, 6. l நிறங்கள்: வெள்ளை. l பரிகாரம்: வேல்முருகனை வழிபட குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்.

 

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் கொடுக்கல் வாங்கலில் இருந்த சுணக்க நிலை மாறும். வரவேண்டிய பணபாக்கிகள் வசூலாகும். புதிய கடனுக்கான முயற்சிகளை இக்கால கட்டத்தில் முடித்துக்கொள்ளுதல் நன்மை பயக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு காத்திருந்த இடமாற்றம், பதவி உயர்வு தேடி வரும். மேன்மைகளை அடைவீர்கள். வெளிநாட்டு வேலை எதிர்பார்ப்பவர்களுக்கு அழைப்புகள் வந்து சேரும் காலமிது. குடும்பத்தில் நடைபெற வேண்டிய சுபகாரியங்கள் சுமுகமாக நடைபெறும்.

பெண்கள் தடைபட்டிருந்த திருமண ஏற்பாடுகள் இனிதே நிறைவேறும். கலைத் துறையினருக்கு, நன்மை பயக்கும். லட்சியங்கள் கைகூடும். அரசியல்வாதிகளுக்கு, உங்கள் மேல் போட்டி மற்றும் பொறாமை கொண்டவர்கள் ஒதுங்கிவிடுவார்கள். மாணவர்களுக்கு, கல்வி விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். புதிய நட்புகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன். l திசைகள்: வடக்கு, கிழக்கு. l எண்கள்: 3, 9. l நிறங்கள்: சிவப்பு, மஞ்சள். l பரிகாரம்: தினமும் சிவன் கோவிலுக்குச் சென்று, தீபமேற்றி வர நன்மைகள் நடக்கும்.

 

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சினையையும் மிகச் சாதுர்யமாகக் கையாளுவீர்கள். உங்களது யோசனைகளை மற்றவர்கள் கேட்டும் அனுசரித்தும் செல்வார்கள். தொழில் துறையினருக்கு, கடுமையான பணி இருக்கும். உத்தியோகஸ்தர்கள் வேலை இழந்தவர்கள் மீண்டும் பணியில் சேருவீர்கள். உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள். பெண்கள் எதிர் விளைவுகளை முன்கூட்டியே யோசித்து வார்த்தைகளை எச்சரிக்கையாக விடுங்கள்.

கலைத் துறையினருக்கு, நற்பெயரும் கீர்த்தியும் வந்து சேரும். பொருளாதார வசதிகள் பெருகிட வாய்ப்பான காலமிது. அரசியல்வாதிகளுக்கு, புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். எந்த முயற்சியையும் தயக்கமின்றிச் செய்யலாம். நட்பு வட்டம் பெருகும். எதிரிகள் விலகிச்செல்வார்கள். மாணவர்கள் கேளிக்கைகளில் ஈடுபட மனம் ஏங்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன். l திசைகள்: கிழக்கு, தெற்கு l எண்கள்: 1, 3. l நிறங்கள்: மஞ்சள், சிவப்பு. l பரிகாரம்: ஸ்ரீலக்ஷ்மி நாராயணரை வழிபடுவது நல்லது. பசுவுக்கு ஆகாரம் கொடுப்பது நல்லது.

 

மகர ராசி வாசகர்களே

நெடுங்காலமாக மனத்தில் தேங்கிக் கிடந்த திட்டங்களை இந்த வாரம் நிறைவேற்றிக்கொள்ள வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறீர்கள். தங்கள் தொழிலை விரிவுபடுத்திக்கொள்ள சரியான சமயமிது. உத்தியோகஸ்தர்களுக்கு, புதிய பொறுப்புகள் வந்து சேரும். கிடப்பில் போட்டிருந்த வேலைகளைச் செய்வீர்கள். குடும்பத்தில் வீடு கட்டும் முயற்சியில் உள்ளவர்களுக்கு துரித கதியில் பணிகள் நடைபெறும். பெண்கள் ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும்.

கலைத் துறையினருக்கு, முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு, அலைச்சல் இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். மாணவர்களுக்கு, புதியதாகக் கல்வி பயில மனம் ஆனந்தப்படும். நல்ல நட்பு வட்டாரம் கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி. l திசைகள்: தெற்கு. l எண்கள்: 5, 6, 9. l நிறங்கள்: நீலம், பச்சை. l பரிகாரம்: கோளறு பதிகம் படிப்பது. சிவன் கோவிலுக்கு இளநீர் அபிஷேகம் செய்வது.

 

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிலும் பதற்றத்தைத் தவிர்த்து நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். நுண்கலை, கட்டிடக்கலை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நன்மை கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் வெளிநாட்டில் பணிபுரியும் அன்பர்களுக்கு அரசு அனுகூலம் உண்டு. குடும்பத்தில் சுபகாரியங்கள் கூடி வரும். புதிய வீட்டுக்குச் செல்வது சிறிது தள்ளிப் போகலாம். பெண்கள் வாழ்வில் குதூகலம் பிறக்கும். இல்லத்தில் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கப் பெறும். உறவினர்கள் வீட்டு விசேஷங்களுக்குச் சென்று வருவீர்கள்.

கலைத் துறையினருக்கு, அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துகளைப் பரிமாறும் முன் பொறுமை, நிதானம் அவசியம் என்பதை உணருங்கள். அரசியல்வாதிகளுக்கு, விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். மாணவர்களுக்கு, தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்குரிய வாய்ப்பு தெரியும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி. l திசைகள்: மேற்கு, வடக்கு l எண்கள்: 5, 6. l நிறங்கள்: வெள்ளை, பச்சை. l பரிகாரம்: ஸ்ரீதுர்க்கையை வழிபடுவது நல்லது. மது மாமிசத்தை அறவே விட வேண்டும்.

 

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் தங்களுக்கு வரவேண்டிய பணபாக்கிகள் வந்து சேரும். தொழிலில் வியாபாரிகளுக்கு நெடுநாட்களாக இருந்து வந்த கடன்கள் தீரும். வீடு மாற்றிக்கொள்ள விரும்புபவர்கள் மாற்றிக் கொள்ளத்தக்க தருணம் வந்து சேரும். பெண்களுக்கு, பெண்களால் இருந்த தொல்லைகள் மறைந்து நிம்மதி பிறக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். கலைத் துறையினருக்கு, சாதகமான முன்னேற்றம் ஏற்படப்போவது உறுதி. நல்ல அறிமுகம் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் உண்டு.

அரசியல்வாதிகளுக்கு, நல்ல பெயர் வாங்குவீர்கள். மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும். எதிரிகள் வகையில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். மாணவர்களுக்கு, கேளிக்கையில் நாட்டம் அதிகரிக்கும். தந்தை, தாய் பேச்சைக் கேட்டு நடப்பீர்கள். உங்களின் மனதை எல்லோரும் புரிந்து நடந்துகொள்வார்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன். l திசைகள்: வடக்கு, மேற்கு l எண்கள்: 3, 9. l நிறங்கள்: சிவப்பு, மஞ்சள். l பரிகாரம்: முன்னோர்கள் வழிபாடும் சித்தர்கள் வழிபாடும் நன்மை தரும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close