[X] Close

இன்றைய (08.06.2018) ராசி பலன்கள்!


today-horoscope

  • kamadenu
  • Posted: 08 Jun, 2018 07:38 am
  • அ+ அ-

மேஷம் தடைபட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சிலவற்றுக்கு உங்களின் அவசர முடிவுகள்தான் காரணம் என்பதை தாமதமாக உணர்வீர்கள். 
ரிஷபம் கவுரவப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும். ஆடை, ஆபரணம் சேரும் 
மிதுனம் எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். சில பிரச்சினைகளுக்கு எதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டு. விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும்.
கடகம் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். திடீர் பயணம் உண்டு.
சிம்மம் கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது பிரச்சினைகளைத் தவிர்க்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. மின்சாரம், மின்னணு சாதனங்கள் பழுதாகும்.
கன்னி நீண்ட நாட்களாகத் தடைபட்டிருந்த வேலைகள் திடீரென முடியும். நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள். விலகியிருந்த பழைய சொந்தபந்தங்கள் தேடிவந்து பேசுவார்கள்.
துலாம் மனதில் நிலவிய குழப்பங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். விருந்தினர்களின் வருகை உண்டு. பிள்ளைகளின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.
விருச்சிகம் உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
தனுசு தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். பேச்சில் அனுபவ முதிர்ச்சி தெரியும். கேட்ட இடத்தில் பணம் தாராளமாகக் கிடைக்கும்.
மகரம் ஓரளவு பணம் வரும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். அநாவசிய செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள்.
கும்பம் புதிய திட்டங்கள் நிறைவேறும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். குடும்பத்தினரின் எண்ணங்களையும், ஆசைகளையும் புரிந்துகொண்டு அவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
மீனம் வருங்காலத்தைப் பற்றிய கவலைகள், ஏமாற்றம் வரக்கூடும். கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய நினைவுகளில் அவ்வப்போது மூழ்குவீர்கள்.
 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close