[X] Close

இந்து தமிழ் திசை வார ராசி பலன்கள் மே 30 முதல் ஜீன் 05 வரை (துலாம்  முதல் மீனம் வரை)


30-05

  • kamadenu
  • Posted: 30 May, 2019 12:15 pm
  • அ+ அ-

-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரனின் நேரடிப்பார்வை ராசியில் விழுவதால் எந்தக் காரியத்தையும் செய்து முடிப்பதில் இருந்த தாமதம் நீங்கும்.  தொழில், வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் வீண் அலைச்சலைச் சந்திக்க வேண்டி வரும்.

அலுவலகப் பணிகளால் பதற்றம் உண்டாகும். குடும்பத்தில் கோபமாகப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. அக்கம்பக்கத்தினருடன் சில்லறைச் சண்டைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை வரலாம். பெண்களுக்கு, அடுத்தவர்களின் பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

தெய்வபக்தி அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு, கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். உங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்கும்போது கவனமாகப் பேசுவது நல்லது. மாணவர்களுக்கு, கல்வியைப் பற்றிப் பதற்றம் வந்து நீங்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி.

திசைகள்: கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: சிவப்பு, வெள்ளை.

எண்கள்: 5. 6, 9

பரிகாரம்: அஷ்டலட்சுமிகளை யும் வணங்கி வர, தைரியம் கூடும். பணக்கஷ்டம் குறையும். சுபிட்சம் ஏற்படும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் குரு சஞ்சாரத்தால் எதிர்ப்புகள் விலகும். பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். நண்பர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தைச் செய்துமுடிப்பீர்கள்.

உத்தியோகத்தில் பதவி உயர்வு, நிலுவைப் பணம் வருவது தாமதப்படும். குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படலாம். கருத்து வேற்றுமை வந்து நீங்கும். உறவினர்களிடம் நிதானமாகப் பேசுவது நல்லது. பெண்களுக்கு, பயணங்களின்போது உடைமைகளைக் கவனமாகப் பார்த்துக்கொள்வது நல்லது.

கடன் பிரச்சினை தீரும். அரசியல்வாதிகளுக்கு, இழுபறியாக இருந்த காரியங்கள், சாதகமாக நடந்து முடியும். வாகனங்களைப் பயன்படுத்தும்போது கவனம் தேவை. மாணவர்களுக்குச் சக மாணவர்களுடன் இருந்த மனவருத்தம்  நீங்கும். பாடங்கள் படிப்பதில் இருந்த தடைகள் நீங்கி ஆர்வமாகப் படிப்பீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.

திசைகள்: மேற்கு, வடக்கு.

நிறங்கள்: மஞ்சள், பச்சை.

எண்கள்: 2, 6, 9

பரிகாரம்: பெருமாளை வணங்கி வர முன்ஜென்மப் பாவம் நீங்கும். திருமணம் கைகூடும்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் ஆக்கப்பூர்வமான யோசனைகள்  தோன்றினாலும் அதைச் செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும். பேச்சைக் கட்டுப் படுத்திக் கொள்வது நல்லது. மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது.

எந்த வேலையைச் செய்யும்போதும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். சுபச்செலவுகள் ஏற்படலாம். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

பெண்களுக்கு, வீண் பேச்சைக் குறைப்பது நல்லது. கலைத் துறையினர் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். எடுத்துக் கொண்ட காரியங்களில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. மாணவர்களுக்கு, அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் கவனம் தேவை. பாடங்களைப் படிப்பதில் தீவிரம் காட்டுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.

திசைகள்: கிழக்கு, வட கிழக்கு.

நிறங்கள்: மஞ்சள், ஆரஞ்சு.

எண்கள்: 2, 3, 4

பரிகாரம்: பிரத்தி யங்கரா தேவியை அர்ச்சனை செய்து வணங்கிவர, எல்லாக் கஷ்டங்களும் நீங்கும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியைத் தைரியகாரகன் செவ்வாய் ராசியைப் பார்ப்பதால் தைரியமாக எந்தக் காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். லாபம் ஏற்படும். உடல் சோர்வு நீங்கும். நண்பர்கள், உறவினர்களுடன் மனவருத்தம் நீங்கும். பயணங்கள் வாய்க்கும்.

தொழில், வியாபாரத்தில் தாமதம் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, எதிர்பார்த்த இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவை கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். பெண்களுக்கு, துணிவு அதிகரிக்கும். காரிய வெற்றிக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும்.

அரசியல்வாதிகள் இடமாற்றம், பதவி இறக்கத்தைச் சந்திக்க வேண்டி வரும். மாணவர்கள் கூடுதல் கவனம் செலுத்திப் பாடங்களைப் படிப்பது நல்லது. விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும்போது கவனம் தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்.

திசைகள்: கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: கருநீலம், பச்சை.

எண்கள்: 8, 9

பரிகாரம்:  ராகு காலத்தில் சர்பேஸ்வரரை வணங்க, காரியத் தடை நீங்கும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் எந்தக் காரியத்தையும் செய்து முடிப்பதில் தடை நீங்கும். பகைவர்களால் ஏற்பட்ட சிறு தொல்லைகள் நீங்கும். புதிய நபர்களுடன் பழகும்போது கவனம் தேவை. கடன் பிரச்சினை தீரும்.

நினைத்த காரியத்தைச் செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். கவுரவம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் வீண் அலைச்சலைச் சந்திக்க வேண்டி வரும்.

அடுத்தவர்களின் பிரச்சினைகளில் தலையிடுவதைப் பெண்கள் தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகள் கோபமாகப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது.  மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். மாணவர்களுக்கு, கல்வியைப் பற்றி படபடப்பு ஏற்பட்டு நீங்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி.

திசைகள்: தெற்கு, தென் மேற்கு.

நிறங்கள்: கரும்பச்சை, வெண்மை.

எண்கள்: 4, 5, 8.

பரிகாரம்: பைரவரைத் தரிசித்து வணங்கி வர, எல்லா நன்மைகளும் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் அது கைகூடும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் மன உறுதி அதிகரிக்கும். எதையும் கண்டு அஞ்சாமல் பணியாற்றுவீர்கள். காரிய அனுகூலம் உண்டாகும். தேவையான நேரத்தில் உதவி கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

தொழில், வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எடுத்த காரியத்தில் தடைகள் நீங்கும். குடும்பத்தினரால் பதற்றம் உண்டாகலாம். பெண்களுக்கு, எடுத்த காரியத்தைச் செய்து முடிக்க அலைய வேண்டி வரும்.

கலைத் துறையினருக்கு, புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் சிரமங்கள் குறையும். வேலைப்பளு குறையும். எல்லாக் காரியங்களும் அனுகூலமாக நடக்கும். கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். மாணவர்கள் வெற்றிபெறக் கடுமையாக உழைக்க வேண்டி வரும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி.

திசைகள்: கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: மஞ்சள், வெண்மை.

எண்கள்: 4, 6, 9

பரிகாரம்: நவகிரகத்தில் குரு வுக்கு தீபம் ஏற்றி வணங்க, குடும்ப ஒற்றுமை உண்டாகும். மனமகிழ்ச்சி ஏற்படும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close