[X] Close

இந்து தமிழ் திசை வார ராசி பலன்கள் மே 30 முதல் ஜூன் 05 வரை (மேஷம் முதல் கன்னி வரை)


30-05

  • kamadenu
  • Posted: 30 May, 2019 12:08 pm
  • அ+ அ-

-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் தனாதிபதி சுக்கிரன் ராசியில் இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் சுபச்செலவுகள் ஏற்படும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். மற்றவர்களுக்கு உங்கள் மீது இருந்த கோபம் குறையும்.

தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். புதிய ஆர்டர்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வாக்கு வன்மையால் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்வீர்கள். குடும்பத்தில் எதிர்பார்த்த சுமுகமான சூழ்நிலை காணப்படும். பெண்களுக்கு, பணவரத்து திருப்தி தரும். கலைத் துறையினருக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களைச் செய்து முடிப்பீர்கள்.

பணவரத்து திருப்திகரமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு, காரிய வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் மற்றவர் மனத்தில் இடம் பிடிப்பீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.

திசைகள்: கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, சிவப்பு.

எண்கள்: 1, 3, 9

பரிகாரம்: குலதெய்வத்தை வணங்கி வர, எல்லாப் பிரச்சினைகளிலும் நல்ல தீர்வு கிடைக்கும்.

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் விரய ஸ்தானத்தில் சஞ்ரிப்பதாலும் ராசியைக் குரு பகவான் பார்ப்பதாலும் சுபச் செலவுகள் உண்டாகும். மற்றவர்களால் இருந்த மனகஷ்டம் நீங்கும். அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது.

புதிய வர்த்தக ஆர்டர்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி வரும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. பெண்களுக்கு, எதிர்பாராத சுபச்செலவுகள் உண்டாகும்.

கலைத் துறையினருக்கு, கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சினைகள் தீரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசியல்வாதிகள் தங்களுடைய வாக்கு வன்மையால் எதையும் சாதித்துக்கொள்வீர்கள். மாணவர்களுக்கு, கூடுதல் மதிப்பெண் பெற மிகவும் கவனமாகப் படிக்க வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி.

திசைகள்: வடக்கு, வட மேற்கு.

நிறங்கள்: மஞ்சள், வெள்ளை.

எண்கள்: 2, 6 l

பரிகாரம்:  பெருமாளை வணங்கி வர, மனோதைரியம் கூடும். பணக்கஷ்டம் குறையும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் புதன் விரயஸ்தானத்தில் இருந்தாலும் ராசியில் செவ்வாய் - ராகு சஞ்சாரத்தால் வீண் கவலை நீங்கும். மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும்.

வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பழைய பாக்கிகளை வசூல் செய்வீர்கள். உத்தியோகத்தில் கடுமையாக உழைக்க வேண்டி வரும். எடுத்த வேலையைச் செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும். திருப்தியின்மை நிலவும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

கலைத் துறையினருக்குப் பிரச்சினை குறையும். அரசியல்வாதிகளுக்கு, வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம். புதிய முயற்சிகளை யோசித்துத் திட்டமிட்டுச் செய்வது நல்லது. மாணவர்களுக்கு, கல்வியில் வெற்றி பெறக் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி. l

திசைகள்: மேற்கு, வடக்கு.

நிறங்கள்: பச்சை, நீலம்.

எண்கள்: 1, 5, 8

பரிகாரம்: முருகனை வணங்கி வர, முன்ஜென்மப் பாவம் நீங்கும். திருமணமாகாதவர்களுக்குத் திருமணம் கைகூடும்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியைக் குரு பார்ப்பதால் எந்தப் பிரச்சினையையும் சமாளிக்க ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றும். மந்தநிலை மாறும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். நேர்மறையான எண்ணங்கள் உருவாகும். சக ஊழியர்கள், மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.

குடும்பத்தினரிடம் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை. பெண்கள் வீண் பேச்சைக் குறைப்பது நல்லது. கலைத் துறையினருக்கு, வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம். அரசியல்வாதிகளுக்கு கூடுதல் பணிச்சுமையால் உடல் சோர்வு ஏற்படலாம்.

மேலிடத்தில் வீண் பேச்சுகளைத் தவிர்ப்பது நல்லது. அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் கவனம் தேவை. பாடங்களைப் படிப்பதில் தீவிரம் காட்டுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி.

திசைகள்: கிழக்கு, தென் மேற்கு.

நிறங்கள்: வெள்ளை, பச்சை.

எண்கள்: 2, 6

பரிகாரம்: வாராகி தேவியை அர்ச்சனை செய்து வணங்கினால்  எல்லாக் கஷ்டமும் நீங்கும். எதிர்ப்புகள்  அகலும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சூரியன் சஞ்சாரத்தால் எதிர்ப்புகள் விலகும். பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். தனிமையாக இருக்க நினைப்பீர்கள். தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். வர்த்தக ஆர்டர்கள் கிடைத்தாலும் சரக்குகள் அனுப்புவதில் தாமதம் ஏற்படலாம்.

மேலிடத்துடன் கருத்து வேறுபாடுகள் அகலும். குடும்பத்தில் குழப்பம் ஏற்படலாம். கருத்து வேற்றுமை வந்து நீங்கும். பெண்கள் உடல்நலனில் அக்கறை தேவை. கலைத் துறையினர் மற்றவர்களிடம் அனுசரித்துச் செல்ல வேண்டும்.

உடல் சோர்வு உண்டாகலாம். அரசியல்வாதிகளுக்கு, நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். வாகனங்களைப் பயன்படுத்தும்போது கவனம் தேவை. மாணவர்களுக்கு, சக மாணவர்களுடனான மனவருத்தம் நீங்கும். படிப்பதில் இருந்த தடைகள் நீங்ங்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி. திசைகள்: கிழக்கு, வடக்கு 

நிறங்கள்: சிவப்பு, ஆரஞ்சு

எண்கள்: 1, 3, 5.

பரிகாரம்:  சிவபெருமானை வணங்க காரியத் தடை நீங்கும். மன அமைதி கிடைக்கும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் புதனின் பாக்கியஸ்தான சஞ்சாரத்தாலும் ராசியைப் பார்க்கும் செவ்வாய் சஞ்சாரத்தாலும் தைரியமாக எந்தக் காரியத்தையும் செய்துமுடிப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். கடினமான வேலைகளையும் எளிதாகச் செய்து முடிக்கும் திறமை உண்டாகும்.

தயக்கம், பயம் நீங்கும். தொழில், வியாபாரத்தில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இடமாற்றம், பதவி இறக்கத்தைச் சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். பெண்களுக்கு, துணிச்சல் அதிகரிக்கும்.

கலைத் துறையினருக்கு, எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். அரசியல்வாதிகள் மற்றவர்களுக்கு உதவப் போய் வீண் பழி ஏற்படலாம். அலைச்சல் அதிகரிக்கும். மாணவர்களுக்கு, கல்விப் பயணம் மேற்கொள்ளலாம்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.

திசைகள்: தெற்கு, தென் மேற்கு

நிறங்கள்: நிலம், மஞ்சள்.

எண்கள்: 2, 4, 7

பரிகாரம்: தேவி கருமாரியம்மனை வணங்கி வர, எல்லாப் பிரச்சினைகளிலும் நல்ல தீர்வு கிடைக்கும். கஷ்டங்கள் நீங்கும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close