[X] Close

இன்றைய (05.06.2018) ராசி பலன்கள்!


today-horoscope

  • kamadenu
  • Posted: 05 Jun, 2018 07:53 am
  • அ+ அ-

மேஷம் உங்கள் ரசனைக்கேற்ற, காற்றோட்டமுள்ள வீடு அமையும். சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். ஆடை, ஆபரணம் சேரும்.

ரிஷபம் இழுபறியாக இருந்துவந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். அயல்நாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு.

மிதுனம் தொலைநோக்குச் சிந்தனையுடன் செயல்பட்டு பழைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். மனைவிவழியில் செல்வாக்குக் கூடும். திருமணப் பேச்சுவார்த்தை கூடிவரும்.

கடகம் சிறுசிறு தீக்காயங்கள் ஏற்படக்கூடும். கவனம் தேவை. இரத்த அழுத்தம் அதிகரிக்கும். சகோதரர்கள் அதிருப்தி அடைவார்கள். யாருக்கும் ஜாமீன், உத்தரவாதம் தரவேண்டாம்.

சிம்மம் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். வெற்றி பெற்ற மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும்.

கன்னி சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். தன்னிச்சையாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வழக்குகள் சாதகமாகும். அரசாங்க விஷயம் விரைந்து முடியும்.

துலாம் உறவினர், நண்பர்களுடன் இருந்த மோதல் நீங்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவி கிடைக்கும். இந்தி, தெலுங்கு பேசுபவர்களால் அனுகூலம் உண்டு.

விருச்சிகம் மனப்போராட்டம் முடிவுக்கு வரும். குழம்பிக் கொண்டிருந்த விஷயத்தில் தெளிவு பிறக்கும். ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்தைக் காப்பாற்ற முற்படுவீர்கள்.

தனுசு தன்னம்பிக்கை பிறக்கும். கம்பீரமாகப் பேசி காரியங்களைச் சாதிப்பீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும். தங்க நகைகள், விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். 

மகரம் பிரச்சினைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து களைவீர்கள். எங்கு சென்றாலும் மதிப்பு, மரியாதை கூடும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். விருந்தினர் வருகை உண்டு.

கும்பம் வீடு, மனை வாங்கும்போது வில்லங்கம் ஏதேனும் இருக்கிறதா என பார்த்து வாங்குங்கள். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள்.

மீனம் சின்ன விஷயங்களைக்கூட பலமுறை போராடி முடிக்க வேண்டிய நிலை ஏற்படும். எதிலும் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது. வீடு, வாகனம் பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

வாக்களிக்கலாம் வாங்க

'தும்பா' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close