[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 24 May, 2019 08:58 am
  • அ+ அ-

மேஷம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். நண்பர்கள், உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள்.

ரிஷபம்: வெளிப்படையான பேச்சால் சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். எதிலும் மகிழ்ச்சி கிட்டும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பண வரவு உண்டு.

மிதுனம்: சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சொந்தபந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. கலைப்பொருட்கள் சேரும்.

கடகம்: மனசாட்சிக்கு விரோதமின்றி செயல்பட வேண்டுமென நினைப்பீர்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். ஆடம்பர செலவுகளைத் தவிர்ப்பீர்கள்.

சிம்மம்: சகோதரரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள்.

கன்னி: புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

துலாம்: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணவரவு திருப்தி கரமாக இருக்கும். அரசு காரியங்களில் வெற்றியுண்டு. சமூகத்தில் முக்கிய அந்தஸ்தில் இருப்பவரின் நட்பு கிடைக்கும்.

விருச்சிகம்: நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு முடிவுகட்டுவீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். கணவன் - மனைவிக்குள் அன்யோன் யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் உடல்நிலை சீராக இருக்கும்.

தனுசு: மனநிறைவுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வீர்கள். பிள்ளைகளின் எண்ணங் களைப் பூர்த்தி செய்வீர். சகோதர, சகோதரிகளால் நன்மையுண்டு.

மகரம்: பல வேலைகளையும் இழுத்துப் போட்ட பார்க்க வேண்டியது வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்க்கவும்.

கும்பம்: ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியுண்டு.

மீனம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு காரியங்களை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். சகோதரர் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close