[X] Close

இன்றைய (02.06.2018) ராசி பலன்கள்!


today-horoscope

  • kamadenu
  • Posted: 02 Jun, 2018 07:08 am
  • அ+ அ-

மேஷம் உங்களின் நிர்வாகத் திறமை பளிச்சிடும். புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு பல வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு.
ரிஷபம் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. பிற்பகல் முதல் மனஉளைச்சல் நீங்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். விருந்தினர் வருகை உண்டு.
மிதுனம் சிலநேரங்களில் மனம் அமைதியற்றுக் காணப்படும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் அனுசரித்துப் போவது நல்லது. உங்களின் கோபத்தால் இழப்புகள், பகைமை ஏற்படும்.
கடகம் பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். ஆடை, ஆபரணம் சேரும்.
சிம்மம் கனிவானப் பேச்சால் காரியங்களைச் சாதிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும்.
கன்னி எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். பிள்ளைகளின் தனித்திறமைகளைக் கண்டறிந்து அவர்களை ஊக்குவிப்பீர்கள்.
துலாம் அதிகம் உழைக்க வேண்டியது வரும். முக்கிய பிரமுகர்களைச் சந்திப்பீர்கள். தாயருடன் வீண் விவாதம் வந்து போகும். பழைய பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வு காண்பீர்கள்.
விருச்சிகம் உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தைச் சீர் செய்வீர்கள். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
தனுசு எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். பிற்பகல் முதல் கணவன் - மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள் ஆதரவு உண்டு.
மகரம் குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். சிறுசிறு அவமானங்களும் ஏற்படலாம். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. வீடு, வாகனம் பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.
கும்பம்  எதிர்பார்த்த காரியங்கள் தாமதமாக முடியும். உறவினர்கள், நண்பர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். யாருக்கும் ஜாமீன், உத்தரவாதக் கையெழுத்திட வேண்டாம்.
மீனம்  பெரியோரின் ஆசி கிட்டும். நீண்ட நாட்களாகப் பார்க்க நினைத்த ஒருவரைச் சந்திப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close