[X] Close

இந்து தமிழ் திசை வார ராசி பலன்கள் மே 23 முதல் மே 29 வரை (துலாம்  முதல் மீனம் வரை)


23-29

  • kamadenu
  • Posted: 23 May, 2019 08:57 am
  • அ+ அ-

-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரனின் சப்தமஸ்தான சஞ்சாரத்தால் மன உறுதி பிறக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பாலினத்தவரால் நன்மை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் இருக்கும். பயணத்தால் சாதகம் கிடைக்கும்.

கடிதப் போக்குவரத்து நன்மை தரும். புதிய பொறுப்புகள் சேரும். அடுத்தவர் செயல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டாம். பெண்களுக்கு, எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். கலைத் துறையினருக்கு, எதிர்பாராத செலவுகள் உண்டாகும்.

ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன்னர் ஆலோசிக்க வேண்டும். அரசியல்வாதிகளுக்கு, எந்தவொரு காரியமும் மந்தமாக நடக்கும். திட்டமிட்டுச் செயல்படுவது வெற்றிக்கு வழிவகுக்கும். மாணவர்களுக்கு, கவனத் தடுமாற்றம் ஏற்படாமல் பாடங்களைப் படிப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.

திசைகள்: மேற்கு, தென்மேற்கு.

நிறங்கள்: வெள்ளை.

எண்கள்: 2, 5, 6.

பரிகாரம்: வெள்ளி, ஞாயிற்றுக்கிழமையன்று மாரியம்மனை வணங்க எல்லாப் பிரச்சினைகளும் தீரும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் வீண் வாக்குவாதங்கள் அகலும். உற்சாகம் ஏற்படும். வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானை ராசிநாதன் செவ்வாய் பார்ப்பதால் வீண்பகை உண்டாகலாம். குடும்பத்தில் சிறுசிறு சண்டைகள் ஏற்படலாம்.

கணவன் மனைவி பரஸ்பரம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. சகோதரர்கள், தந்தையாரிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் ஏற்படலாம். பங்குதாரர்களை அனுசரித்துச்செல்ல வேண்டும்.

உத்தியோகத்தில் அலைச்சல், கூடுதல் வேலைச்சுமை இருக்கும். பெண்களுக்கு, சமையல் செய்யும்போது கவனம் தேவை. கலைத் துறையினருக்கு, வெளிநாட்டு வாய்ப்புகள் வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு, தன்னம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்களுக்கு, இருசக்கர வாகனங்களில் கவனம் தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், செவ்வாய், வியாழன்.

திசைகள்: வடக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்.

எண்கள்: 3, 9.

பரிகாரம்: கந்தசஷ்டி கவசம் படித்து முருகப் பெருமானை வணங்கி வர எதிர்ப்புகள் விலகும்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் சனி இருந்தாலும் ராசியைச் செவ்வாய் பார்ப்பதால் தன்னம்பிக்கை வளரும். பணவரவு திருப்தி தரும். வீண் பேச்சுகளைத் தவிர்க்க வேண்டும். அறிவுத்திறன் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற்றுத் தொய்வு நீங்கும்.

உத்தியோகத்தில் புதிய பதவி தேடிவரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தில் பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவிக்குள் திருப்தியான உறவு காணப்படும். பெண்களுக்கு, திட்டமிட்டப்படி எதையும் செய்து முடிப்பீர்கள்.

மனோதிடம் கூடும். கலைத் துறையினருக்கு, ராசியில் சனி இருப்பதால் கவனமாகப் பேசவேண்டும். அரசியல்வாதிகள் கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் எடுக்கும் முயற்சிகள் பலன் தரும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி.

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு.

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்.

எண்கள்: 1, 3, 6.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமையில் நெய்தீபம் ஏற்றி வணங்க வேண்டும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சனியின் சஞ்சாரத்தால் வீண் செலவுகள் குறையும். பணவரவு அதிகரிக்கும். காரியங்களில் தாமதம் அகலும். எதிர்பார்த்த லாபம் தாமதப்படும். வியாபாரம் பற்றிய கவலை ஏற்பட்டு மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும்.

கணவன் மனைவிக்குள் வருத்தம் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. நண்பர்கள், உறவினரிடம் கவனமாகப் பேச வேண்டும். பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பெண்களுக்கு, எந்த ஒரு காரியத்தையும் செய்யும்போது, ஆலோசனை செய்வது நல்லது. கலைத் துறையினருக்கு, முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம். அரசியல்வாதிகளுக்கு மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி.

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: நீலம், பச்சை.

எண்கள்: 5, 6.

பரிகாரம்: சனிக்கிழமையன்று சனி பகவானை வணங்கி காகத்துக்கு எள் சாதம் வைத்து வர ஆரோக்கியம் மேம்படும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சனியின் சஞ்சாரம் எல்லா வகையிலும் நன்மை உண்டாக்கும். மற்றவர்களுக்கு உதவி, மதிப்பு கிடைக்கப் பெறுவீர்கள். சுபச் செலவுகள் உண்டாகும். ஆன்மிக யாத்திரைகள் சென்று வருவீர்கள்.

தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளைச் சந்திக்க வேண்டி இருக்கும். வேறு வேலைக்குப் போகலாமா என்று தோன்றுமளவுக்குப் பணிச்சுமை இருக்கும். குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன் மனைவிக்குள் திடீர் மனஸ்தாபம் ஏற்படலாம்.

பிள்ளைகளின் கல்விச் செலவு அதிகரிக்கும். பெண்களுக்கு, அடுத்தவர்கள் பொறுப்புகளை ஏற்க வேண்டாம். ஆன்மிகப் பயணம் செல்வதில் விருப்பம் உண்டாகும். கலைத் துறையினருக்கு, வெளிநாட்டு வாய்ப்புகள்

கை கூடி வரும். அரசியல்வாதிகளுக்கு, மேலிடத்தின் பார்வை உங்கள்மீது படும். மாணவர்களுக்கு, மிகவும் கவனமாகப் பாடங்களைப் படிப்பது அவசியம்

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி.

திசைகள்: மேற்கு, தென்மேற்கு, வடகிழக்கு.

நிறங்கள்: நீலம், பச்சை.

எண்கள்: 2, 6.

பரிகாரம்: பகவத்கீதை படித்து கிருஷ்ணனை வணங்கி வர எல்லாப் பிரச்சினைகளும் தீரும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் குரு ஒன்பதாமிடத்தில் சஞ்சரிக்கிறார். மனோதிடம் அதிகரிக்கும். செல்வம் சேரும். வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.

உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளின் செயல்கள் சந்தோஷத்தைத் தரும். நண்பர்களால் உதவிகள் உண்டு. ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். பெண்களுக்கு, மனத்தில் துணிச்சல் அதிகரிக்கும்.

கலைத் துறையினருக்கு, தொழில் நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டி வரும். புதிய பொறுப்புகள் சுமையாக வரும். அரசியல்வாதிகளுக்கு, வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நன்மை தரும். மாணவர்களுக்கு, பாடங்களைப் படிப்பது வேகம் பெறும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி.

திசைகள்: வடக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்.

எண்கள்: 1, 3, 6.

பரிகாரம்: விநாயகப் பெருமானை வணங்க எல்லாக் கஷ்டங்களும் நீங்கும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close