[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 21 May, 2019 09:09 am
  • அ+ அ-

மேஷம்: தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். சூழ்நிலைக்கேற்றவாறு செயல்படும் சாமர்த்தியத்தை கற்றுக் கொள்வீர்கள். அநாவசிய செலவுகளைக் கட்டுப்படுத்த திட்டமிடுவீர்கள்.

ரிஷபம்: சவாலான காரியங்களையும் வெற்றிகரமாக செய்துமுடிப்பீர்கள். அடுத்தடுத்து செலவுகள் வந்தாலும் அதற்கேற்ற வருமானமும் உண்டு. பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

மிதுனம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிட்டும். நம்பிக்கைக்கு உரியவர்களின் அறிமுகம் கிடைக்கும். பணவரவு உண்டு.

கடகம்: சுறுசுறுப்புடன் செயலாற்றுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களின் உதவியுடன் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள்.

சிம்மம்: பிள்ளைகளின் பிடிவாதப்போக்கு தளரும். உங்கள் ஆலோசனைகளை குடும்பத்தினர் அனைவரும் ஏற்பார்கள். மகளுக்கு எதிர்பார்த்திருந்த இடத்தில் திருமணம் கூடிவரும்.

கன்னி: கவுரவப் பதவிகள் தேடிவரும். மனைவிவழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். புது வேலை அமையும். அரசால் அனுகூலம் உண்டாகும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

துலாம்: சவாலான காரியங்களையும் சாதுர்யமாக முடித்துக் காட்டுவீர்கள். காரியத்தடை, தாமதங்கள் யாவும் நீங்கும். பூர்வீகச் சொத்து விவகாரத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

விருச்சிகம்: கடன் தொகையை ஒருவழியாக பைசல் செய்வீர்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை உருவாகும். அக்கம்பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

தனுசு: ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும். இதனால் உடல் அசதி, சோர்வு, களைப்பு வந்து நீங்கும். நண்பர்களின் உதவியால் சில காரியங்களை நிறைவேற்றுவீர்கள்.

மகரம்: குடும்பத்தில் சுபச்செலவுகள் அடுத்தடுத்து ஏற்படும். விருந்தினர், உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

கும்பம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும் மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

மீனம்: நிர்வாகம் மற்றும் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். வேலைக்கு விண்ணப்பித்து காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் உத்தியோகம் அமையும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close