[X] Close

இன்றைய (31.05.2018) ராசி பலன்கள்!


today-horoscope

  • kamadenu
  • Posted: 31 May, 2018 07:23 am
  • அ+ அ-

மேஷம்: திறமையை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். குடும்பத்தில் அமைதி நிலவும். புதிய முயற்சிக்கு மனைவியின் ஆதரவு கிடைக்கும். பணவரவு சரளமாக இருக்கும்.
ரிஷபம்: கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாகப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்று வருந்துவீர்கள். உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள்.
மிதுனம்:  பணவரவு திருப்திகரமாக இருக்கும். தாய்வழியில் ஆதரவு அதிகரிக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த கலைப்பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
கடகம்: குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். நட்பு வட்டாரம் விரியும். கடன் பிரச்சினைகளைத் தீர்க்க மாற்றுவழி காண்பீர்கள்.
சிம்மம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். தாயின் உடல்நிலை சீராக இருக்கும். நண்பர்கள், உறவினர்களின் உதவி கிடைக்கும்.
கன்னி: எதிர்பாராத செலவுகள் வந்தாலும் எதிர்பார்த்த இடத்திலிருந்து வரும் பணத்தால் சமாளிப்பீர்கள். பேச்சுத் திறமையால் சில காரியங்களை சாதுர்யமாக முடித்துக் காட்டுவீர்கள்.
துலாம்: புது முயற்சிகள் வெற்றியடையும். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
விருச்சிகம்: வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். சகோதரர் வகையில் நன்மை உண்டு. பால்ய நண்பர் ஒருவரைச் சந்தித்து மகிழ்வீர்கள்.
தனுசு: சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் தொடர்ந்து கொண்டிருக்கும். யோகா, தியானம் என மனம் செல்லும். விருந்தினர் வருகை உண்டு.
மகரம்: கணவன் - மனைவிக்குள் எதிர்பாராது கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். அலைச்சல் அதிகரிக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை. திடீர் பயணம் உண்டு.
கும்பம்: மனக்குழப்பங்கள் நீங்கி திட்டவட்டமான முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து ஆலோசனை செய்வீர்கள். வீடு, வாகனம் பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.
மீனம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பழைய கடனைப் பைசல் செய்யும் அளவுக்கு பணவரவு உண்டு

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close