[X] Close

குலதெய்வ வழிபாடு மறக்காதீங்க!


kuladeivam

  • kamadenu
  • Posted: 30 May, 2018 08:59 am
  • அ+ அ-

ஜோதிடர் ஜெயம் சரவணன்

இஷ்ட தெய்வமாக எந்தக் கடவுளை வேண்டுமானாலும் வழிபடுங்கள். சதாசர்வ காலமும் அந்த இஷ்டதெய்வம் குடிகொண்டிருக்கும் ஆலயத்துக்குச் சென்று வாருங்கள். வழிபடுங்கள். நேர்த்திக்கடன் செலுத்துங்கள். அதேசமயம், முக்கியமாக ஒரு வழிபாட்டை, ஒரு தெய்வத்தை மறக்கவே மறக்காதீர்கள்.

அதுதான் குலதெய்வம்... குலதெய்வ வழிபாடு. குலதெய்வ வழிபாடு என்பது மிக மிக முக்கியம். எந்தப் பரிகாரங்கள் செய்வதாக இருந்தாலும் முதலில் குலதெய்வத்திடம் அனுமதி பெறவேண்டும்.

உங்கள் வழிபாட்டு முறை எப்படியோ அதன் வழிமுறையில் பூஜை செய்த பின் பரிகாரங்களைத் தொடருங்கள். வெகு சீக்கிரமே நல்ல பலன் கிடைக்கும் என்பது உறுதி.

ஒருவர் தன் குலதெய்வத்தை 13 தலைமுறைக்கு மேல் தொடர முடியாது என்பதை அறிவீர்களா?

இதன் விபரத்தை நான் முன்பே விளக்கியிருந்தேன். மீண்டும் ஒரு முறை நினைவூட்டுகிறேன்.

எவர் ஒருவருக்கு ஆண் வாரிசு இல்லாமல் பெண் குழந்தை மட்டும் இருக்கிறதோ... அவரோடு அந்த குலதெய்வமும் குலதெய்வ வழிபாடும் முடிந்து விடுகிறது.

அல்லது வாரிசே இல்லாமல் போனாலும் குலதெய்வ வழிபாடு முடிவுக்கு வந்துவிடும்.

மேலே சொன்ன இரண்டுக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது.

குலதெய்வ வழிபாடு “முறையாக செய்யாமல் போனால்” ஆண் வாரிசு இருக்காது.

குலதெய்வத்தை “மறந்தே போனாலும், அல்லது தெரிந்தே வணங்காமல் போனாலும்” வாரிசே இல்லாமல் போகும்.

இல்லை என் தந்தைதான் மறந்துவிட்டார். நான் தேடிப்பிடித்து வணங்கிவருகிறேன் என்பவர்களுக்கு... “முன்னோர் செய்த குற்றம் வாரிசுகளை வந்து சேரும்” என்பது விதி. ஆகவே அது மாறாது, மாற்றமுடியாது என்பதை மனதில் கொள்ளுங்கள்.

எனவே குலதெய்வத்தை மறக்காமல் வணங்குவதே புத்திரபாக்கியத்தை உறுதி செய்யும் என்பதை உணர்ந்து, குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். உங்கள் குலம் தழைக்கும் என்பது உறுதி. வாழையடி வாழையாக வம்சம் வளரும் என்பது சத்தியம்! 

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close