[X] Close

இந்து தமிழ் திசை வார ராசி பலன்கள் மே 16 – மே 22 வரை (துலாம் முதல் மீனம் வரை)


16-22

  • kamadenu
  • Posted: 16 May, 2019 12:15 pm
  • அ+ அ-

-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரனின் நேரடிப் பார்வை ராசியில் இருப்பதால் பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நல்ல யோகமான பலன்களைப் பெறப் போகிறீர்கள். தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும்.

எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்குக் கிடைக்கலாம். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். குடும்பத்தினருடன் ஆன்மிகப் பயணம் செல்லும் நிலை உருவாகும்.

பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கலைத் துறையினருக்கு, புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள் அரசுக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரி, வருமான வரி எதுவாக இருந்தாலும் தாமதிக்காமல் உடனே செலுத்திவிடுவது நல்லது. மாணவர்களுக்கு, மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வியாழன், வெள்ளி.

திசைகள்: மேற்கு, தென்மேற்கு.

நிறங்கள்: சிவப்பு, வெள்ளை.

எண்கள்: 3, 5, 6.

பரிகாரம்: மகாலட்சுமியை வணங்க  கடன் பிரச்சினை தீரும். மன நிம்மதி கிடைக்கும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாயின் பார்வை தனஸ்தானத்தின் மீது பார்ப்பதால் பணவரத்து அதிகரிக்கும். சொத்துக்கள் சம்பந்தமான காரிய அனுகூலம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலைச் சந்திக்க வேண்டி வரும். அலுவலக வேலைகள் உடனே முடியும். நல்ல பெயர் கிடைக்கப் பெறுவீர்கள்.

சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளைக் கேட்பதை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு, எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. கலைத் துறையினர், உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிடுவதையும் கருத்து சொல்வதையும் தவிர்த்தல் நலம். அரசியல்வாதிகள் முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும். மாணவர்களுக்கு,  கூடுதல் கவனத்துடன்  படிப்பது அவசியம்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வெள்ளி.

திசைகள்: வடக்கு, தென்மேற்கு.

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்.

எண்கள்: 1, 6, 9.

பரிகாரம்: திருப்புகழ் பாராயணம் செய்து வர கந்தன் அருளால் கண்டபிணி நீங்கும்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் பூமிகாரகன் செவ்வாய் ராசியைப் பார்ப்பதால் வீடு - மனை - வாகனம் சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிட்டும். மனமகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கப் பெறுவார்கள். பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டி வரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். உறவினர்கள் - நண்பர்கள் மூலம் நன்மை நடக்கும். பெண்களுக்கு, பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். கலைத் துறையினருக்கு, வெளிவட்டாரம் நன்றாக இருக்கும்.

பிரபலங்கள், வேற்று மொழிக்காரர்கள் உதவுவார்கள். அரசியல்வாதிகளுக்கு, உடல் நலம் பாதிக்கும். தைரியமாகச் சில காரியங்களை முடிப்பீர்கள். மாணவர்களுக்கு, கல்வியில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். உற்சாகமாகக் காணப்படுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்:  வியாழன், வெள்ளி.

திசைகள்: கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: மஞ்சள்.

எண்கள்: 3, 6.

பரிகாரம்: அம்பாளுக்கு முல்லை மலர் அர்ப்பணித்து வணங்கிவர எல்லா நன்மைகளும் உண்டாகும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியைத் தைரியகாரகன் செவ்வாய் ராசியை எட்டாம் பார்வையாகப் பார்ப்பதால் துணிச்சலாகக் காரியங்களில் ஈடுபடுவீர்கள் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும் படியான காரியங்கள் நடக்கும். தொழில் வியாபாரம் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும்.

புத்தி சாதூரியத்தால் மேலதிகாரிகள் கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். மனவருத்தம்  நீங்கும். பெண்களுக்கு, காரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும்.

எதிர்பார்த்த பணவரவு இருக்கும். கலைத் துறையினருக்கு, ஓரளவு நன்மைகள் வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு, எதிரிகளின் தொல்லைகள் குறையும். உங்கள் பக்கமுள்ள நியாயம் ஓங்கும். மாணவர்களுக்கு, புத்திசாதுரியம் வெளிப்படும். கல்வியில் இருந்த  தொய்வு நீங்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி.

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: சிவப்பு, பச்சை.

எண்கள்: 5, 6, 9.

பரிகாரம்: விநாயகருக்கு நெய் தீபம் ஏற்றி வணங்கி வர கஷ்டங்கள் நீங்கும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் சூரியன் சஞ்சாரம் மிக அனுகூலம் தரும் வகையில் இருக்கிறது. முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த நல்ல தகவல்கள் வரும். விருப்பங்கள்  கைகூடும். நண்பர்கள் மத்தியில் மரியாதையும், அந்தஸ்தும் உயரும். தொழில் வியாபாரத்தில் பணவரத்து இருக்கும்.

உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாகக் கிடைக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை இருக்கும். பெண்களுக்கு, திடீர்ச் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடையோ தாமதமோ ஏற்படலாம், கவனம் தேவை. கலைத் துறையினருக்கு, இழுபறியான காரியங்கள் முடிவுக்கு வரும்.

தங்க நகை, ரத்தினங்கள் வாங்குவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வங்கிக் கடனுதவி கிடைக்கும். மாணவர்களுக்கு, மிகவும் கவனமாகப் பாடங்களைப் படிப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்.

திசைகள்: மேற்கு, தென்மேற்கு.

நிறங்கள்: சிவப்பு, நீலம்.

எண்கள்: 1, 3.

பரிகாரம்: மஹாலக்ஷ்மிக்குத் தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுவது காரியத் தடைகளைப் போக்கும். நன்மை கிடைக்கும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் அனைத்து கிரகங்களின் சஞ்சாரமும் உங்களுக்கு நன்மை செய்யும் வகையில் இருக்கிறது. எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரவு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பணிகளில் முழுமூச்சுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள்.

குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். புதிதாக வீடு மனை வாங்குவதற்கான வேலைகளைத் தொடங்குவீர்கள். பெண்களுக்கு மற்றவர்களின் பொறுப்புகளை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. கலைத் துறையினருக்கு, காரியங்கள் திருப்திகரமாக இருக்கும்.

புதிய ஒப்பந்தங்களில் இருந்த சிக்கல்கள் தீரும். அரசியல்வாதிகள் தங்கள் பயணங்களில் கவனம் தேவை. வழக்குகள் சாதகமாகும். மாணவர்களுக்கு, பாடங்களைப் படிப்பதில் முழுமூச்சுடன் ஈடுபடுவீர்கள். உங்களது முயற்சிகள் அனைத்தும் கைகூடும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி.

திசைகள்: வடக்கு, வடமேற்கு, தென்மேற்கு.

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்.

எண்கள்: 3, 6.

பரிகாரம்: நவகிரகத்தில் குருவுக்கு மூக்கடலையைக் கட்டி நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close