[X] Close

இந்து தமிழ் திசை வார ராசி பலன்கள் மே 16 – மே 22 வரை (மேஷம் முதல் கன்னி வரை)


16-22

  • kamadenu
  • Posted: 16 May, 2019 12:09 pm
  • அ+ அ-

-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தின் மூலமாக வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். புத்திசாதுரியத்தால் காரிய வெற்றி கிடைக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாகச் செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் சூழ்நிலை வரும். பெண்களுக்கு, மனதிருப்தியுடன் காரியங்களைச் செய்து சாதகமான பலன் பெறுவீர்கள்.

கலைத் துறையினருக்கு, நல்ல செய்தி வந்து சேரும். அரசியல்வாதிகள், வேலைகளைத் திட்டமிட்டு ஆரம்பிப்பது நல்லது. மேலிடத்திலிருந்த மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். மாணவர்களுக்கு, பாடங்களைக் கவனமாகப் படித்துக் கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், செவ்வாய், வெள்ளி. 

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்.

எண்கள்: 3, 4, 9.

பரிகாரம்: விநாயகருக்கு அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வணங்க வேண்டும்.

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் சூரியன் வருவதால் வீணாக மனதை உறுத்திக்கொண்டிருந்த கவலை நீங்கும். எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் காரியத் தடங்கலை ஏற்படுத்தும். பயணத்தினால் வீண் செலவும், அலைச்சலும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கலாம்.

குடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். பெண்களுக்கு, உதவி கேட்டு உங்களை நாடி வருபவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள்.

கலைத் துறையினருக்கு, மட்டற்ற மகிழ்ச்சிகள் வந்து சேரும். அரசியல்வாதிகள் புதிய கடன்கள் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் வரலாம். மாணவர்களுக்கு, சகமாணவர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது. 

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி’

திசைகள்: தெற்கு, தென்மேற்கு.

நிறங்கள்: சிவப்பு, வெள்ளை.

எண்கள்: 5, 6.

பரிகாரம்: நவக்கிரகத்தில் சுக்கிரனுக்குத் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய செல்வம் சேரும். மனத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் செவ்வாய் ராகு சஞ்சாரம் இருப்பதால் நீண்ட நாட்களாக இருந்துவந்த உடல் உபாதை மறையும். எல்லாவற்றிலும் இருந்து வந்த மனக் கவலை நீங்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள்.

குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். பெண்களுக்கு, நிதானமாகப் பேசுவது நன்மை தரும். எதிர்பார்த்த தகவல்கள் நல்லபடியாக வரும். கலைத் துறையினருக்கு, நிலம், வீடு, மனை, வாகனம் ஆகியவற்றை வாங்குவதற்கு இருந்து வந்த தடைகள் அகலும்.

அரசியல்வாதிகளுக்கு, உடல் உபாதைகள் தீரும். வீண் வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். மாணவர்களுக்கு, சக மாணவர்களுடன் பழகும்போது கவனம் தேவை. பாடங்கள் எளிமையாகத் தோன்றும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி.

திசைகள்: மேற்கு, வடமேற்கு, தென்மேற்கு.

நிறங்கள்: நீலம், பச்சை.

எண்கள்: 2, 5, 6.

பரிகாரம்: பெருமாளுக்குத் துளசியால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சந்திரனின் பாதசார சஞ்சாரத்தால் எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும்.

தொழில் ஸ்தான சுக்கிரனின் இருப்பு மூலம் தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். குடும்பத்தில் சந்தோஷமான நிலை காணப்படும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

பிள்ளைகள் மனம் மகிழும்படி தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். விருப்பங்கள் கைகூடும். பெண்களுக்கு  ஆன்மிக நாட்டம் ஏற்படும். கலைத் துறையினருக்கு வெளியில் கொடுத்திருந்த பணம் திரும்பவும் கை வந்து சேரும். அரசியல்வாதிகள், சில நேரம் யோசிக்காமல் பேசி வம்பில் மாட்டிக்கொள்ள நேரலாம். மாணவர்களுக்கு, கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி.

திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்.

எண்கள்: 2, 6.

பரிகாரம்: அம்மனுக்கு அரளிப்பூ அர்ப்பணித்து அர்ச்சனை செய்ய வேண்டும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சூரியன் லாபஸ்தானத்துக்கு மாற்றம் பெறுவதால் எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும். நண்பர்ளால் உதவிகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சுணக்க நிலை மாறும்.

மனம் நோகும்படியான சூழ்நிலைகள் மாறும். நிதானமான செயல்கள் வெற்றியைத் தரும். பெண்களுக்கு, எடுத்த காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். கலைத் துறையினர், தங்கள் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

அரசியல்வாதிகள் தங்களின் பதவியால் சில ஆதாயங்கள் கிடைத்து, மகிழ்ச்சி உண்டாகும். இதன் மூலம் பொதுநலக் காரியங்களுக்குச் செலவு செய்வீர்கள். மாணவர்களுக்கு, கல்வி பற்றிய கவலை குறையும். அதிக மதிப்பெண் எடுக்க ஆர்வமாகப் படிப்பீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி.

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு.

நிறங்கள்: சிவப்பு, வெள்ளை.

எண்கள்: 1, 6.

பரிகாரம்: சிவபுராணம் சொல்லி சிவனை வணங்க பிரச்சினைகள் குறையும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் புதன் பாக்கியஸ்தானத்தில் இருக்கவும் ராசியைச் செவ்வாயும் பார்ப்பதால் தீவிர உழைப்பும் அதிக முயற்சிகளுடனும் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.  தொழில் வியாபாரம் தொடர்பான  விஷயங்கள்  சாதகமாக  நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாகச் செயல்படுவது நல்லது.

குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகள் மகிழ்ச்சியடைய தேவையானவற்றைச் செய்வீர்கள். பெண்களுக்கு, காரிய அனுகூலம் உண்டாகும். கலைத் துறையினர் புதிய காரியங்களைத் தொடங்குவதற்கு முன் நல்ல நேரம் காலம் பார்த்துச் செய்வது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு, வேலைப் பளு கொஞ்ச கொஞ்சமாகக் குறையும். சுணக்க நிலையும் மாறும். மாணவர்களுக்கு, வீண் அலைச்சல் ஏற்படலாம். பாடங்களில் கவனம் செலுத்துவது குறையக் கூடும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி.

திசைகள்: வடக்கு, வடமேற்கு.

நிறங்கள்: சிவப்பு, பச்சை.

எண்கள்: 1, 5, 6

பரிகாரம்:  முருகனுக்குப் பாலபிஷேகம் செய்து வணங்க கஷ்டங்கள் தீரும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close