[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 15 May, 2019 09:33 am
  • அ+ அ-

மேஷம்: பழைய வழக்கில் சாதகமான திருப்பம் ஏற்படும். கடந்த காலத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் நெருங்கி வருவார்கள். காரியத்தில் நிதானம் தேவை.

ரிஷபம்: சவால்களில் வெற்றி பெறுவீர்கள். திருமணப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். புதிய வாகனம் வாங்குவீர்கள். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.

மிதுனம்: கடந்தகால இனிய நிகழ்வுகளை நினைத்து மகிழ்வீர்கள். பெற்றோருடன் கருத்து வேறுபாடு வந்து நீங்கும். வாகனப் பயணத்தின்போது அதிக கவனம் அவசியம்.

கடகம்: புதியவர்களின் அறிமுகத்தால் ஆதாயம் உண்டு. புதிய நண்பர்களால் உங்கள் பிரச்சினைகள் பாதியாகக் குறையும். பணவரவு, பொருள் வரவு உண்டாகும்.

சிம்மம்: பணத் தட்டுப்பாடு நீங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்று வீர்கள். உறவினர்கள் வலிய வந்து உதவுவார்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக்கூடாது.

ஆன்மிக நாட்டம் கூடும். கன்னி: மருத்துவர் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். உணவு, உடல்நலத்தில் கவனம் தேவை. வெளியூர் பயணத்தால் ஆதாயம் உண்டு.

துலாம்: தவிர்க்க முடியாத செலவுகளால் பணப் பற்றாக்குறை ஏற்படும். சகோதர வகையில் அன்புத் தொல்லை அதிகமாகும். அரசு, வங்கி காரியங்கள் இழுபறியாகும்.

விருச்சிகம்: எதிர்பாராத வகையில் பணம் வரும். பங்குச் சந்தை வகையில் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் அன்யோன்யம் கூடும். உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள்.

தனுசு: சமுதாயத்தில் மரியாதை, அந்தஸ்து உயரும். உறவினர்கள் வீட்டு திருமணம், கிரகப் பிரவேசம், சீமந்தம் போன்ற சுப காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

மகரம்: நம்பிக்கை, உற்சாகம் பெருகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். யோகா, தியானம் ஆகியவற்றில் ஈடுபாடு ஏற்படும்.

கும்பம்: இரவுப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடிப்பது அவசியம்.

மீனம்: உங்கள் ரசனைக்கேற்ப வீடு, மனை அமையும். வங்கிக் கடனுதவி கிடைக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். மனைவி வழியில் உதவிகள் உண்டு.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close