[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 14 May, 2019 09:55 am
  • அ+ அ-

மேஷம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவர்வீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் வருங்காலத்துக்காக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

ரிஷபம்: தைரியமான முடிவுகள் எடுத்து வெற்றி காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். சகோதரர் வகையில் மகிழ்ச்சி தங்கும்.

மிதுனம்: மனக்குழப்பங்கள் விலகும். வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள்.

கடகம்: பணப்பற்றாக்குறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். தாயின் உடல்நலம் சீராகும். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். திடீர் பயணம் ஏற்படும்.

சிம்மம்: திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்காதீர்கள். பிற்பகல் முதல் மகிழ்ச்சி உண்டாகும்.

கன்னி: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் ஏற்படக் கூடும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். எந்தக் காரியமானாலும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. 

 துலாம்: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்பொழுது பாராட்டப்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.

விருச்சிகம்: சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் உடல்நலம் சீராக இருக்கும்.

தனுசு: எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். கணவன் - மனைவி இடையே அனுசரித்துச் செல்வீர்கள். விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் குதூகலம் ஏற்படும்.

மகரம்: ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பலமுறை அலைந்து முடிப்பீர்கள். உறவினர், நண்பர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். பிற்பகல் முதல் தடைகள் உடைபடும்.

கும்பம்: புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். பழைய சிக்கல்களில் ஒன்று தீரும். எதிலும் நிதானித்து செயல்படுங்கள். கலைப்பொருட்கள் சேரும்.

மீனம்: பழைய இனிய சம்பவங்களை அடிக்கடி நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வாகன செலவுகள் நீங்கும். பணவரவு உண்டு.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close