[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 12 May, 2019 09:08 am
  • அ+ அ-

மேஷம்: உங்களின் உழைப்புக்கேற்ப வருமானம் உயரும். பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை புரிந்துகொண்டு அவர்களை நெறிப்படுத்துவீர்கள். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

ரிஷபம்: பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு.

மிதுனம்: சகோதரர்களால் நன்மை உண்டு. பூர்வீகச் சொத்து உங்கள் கைக்கு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும்.

கடகம்: பணப்புழக்கம் கணிசமாக உயரும். உடல் நிலை சீராகும். நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். கணவன் - மனைவிக்குள் இருந்த கருத்துவேறுபாடு நீங்கும். திடீர் பயணம் உண்டு.

சிம்மம்: வேலைகள் தடைபட்டு முடியும். சின்னச் சின்ன பிரச்சினைகள் குடும்பத்தில் தலைதூக்கும். உறவினரால் தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள்.

கன்னி: தேவையற்ற அலைச்சல் ஏற்படக் கூடும். பிள்ளைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்ளுங்கள். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டியது வரும்.

துலாம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். விலகியிருந்த பழைய சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். மனைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு.

விருச்சிகம்: புது பொறுப்பு, பதவி தேடி வரும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிட்டும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து முடிவு எடுப்பார்கள். வாகனத்தை சீர்செய்வீர்கள்.

தனுசு: திடீர் திருப்பங்கள் உண்டாகும். குடும்பத்தாரின் ஆதரவு அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வரவேண்டிய பணம் இழுபறிக்குப் பின் கைக்கு வரும்.

மகரம்: சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சுக்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. திடீர் பயணம் ஏற்படக் கூ;டும்.

கும்பம்: நல்ல வாய்ப்புகள் தேடி வரும். சகோதரர் வகையில் குழப்பங்கள் நீங்கி ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

மீனம்: பிள்ளைகளால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். விருந்தினர் வருகையால் வீடு கலகலப்பாகும். சொத்து தொடர்பான பிரச்சினைகளை சுமுகமாகத் தீர்ப்பீர்கள்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close