[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 11 May, 2019 08:44 am
  • அ+ அ-

மேஷம்: புது வாகனம், நவீன ரக மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் சிலர் உங்களின் அதிரடியான வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுவார்கள். திடீர் பயணம் உண்டு.

ரிஷபம்: எதையும் சமாளிக்கும் தைரியம் பிறக்கும். மனோபலம் அதிகரிக்கும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

மிதுனம்: சந்தர்ப்ப சூழ்நிலையைப் புரிந்து கொண்டு சமயோசிதமாகப் பேசும் சாமர்த்தியம் வரும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணவரவு உண்டு. வீட்டைப் புதுப்பிக்க திட்டமிடுவீர்கள்.

கடகம்: தர்மசங்கடமான சூழ்நிலைகளை சமாளிக்க வேண்டி வரும். நண்பர்களால் பிரச்சினைகள் வந்து போகும். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் தலையிட வேண்டாம்.

சிம்மம்: திடீர் செலவுகள் ஏற்படும். பழைய நகையை மாற்றி புது நகைகள் வாங்குவீர்கள். வாகனம், வீடு பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். விருந்தினர் வருகை உண்டு.

கன்னி: மனதில் புது தெம்பு பிறக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. வாகனம் வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்களால் அனுகூலம் உண்டு. பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

துலாம்: பேச்சில் கம்பீரம் தெரியும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். சமூகத்தில் பிரபலமான ஒருவருடன் சகஜமாகப் பேசி காரியம் முடிப்பீர்கள். கடன் பிரச்சினை தீரும்.

விருச்சிகம்: எதிலும் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குலதெய்வக் கோயிலில் நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள்

தனுசு: பழைய கடன் பற்றிய கவலைகள், வீண் பயம் அவ்வப்போது ஏற்படக்கூடும். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைக் குடிப்பது நல்லது. யாரையும் எளிதில் நம்பி ஏமாந்து விடாதீர்கள்.

மகரம்: உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் வாங்குவீர்கள். உறவினர்கள் சிலர் உங்களை கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பார்கள். நவீன ரக மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள்.

கும்பம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பழைய கடனைத் தீர்க்க மனைவிவழி உறவினர்கள் உதவுவார்கள். நிலுவையிலிருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

மீனம்: புதிய திட்டங்கள் அடுத்தடுத்து நிறைவேறும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பிள்ளைகளின் செயல்பாடுகள் ஆக்கபூர்வமாக இருக்கும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close